பொது செய்தி

இந்தியா

விரைவில், 'ரிலையன்ஸ் கிகாபைபர்' சேவை

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement

மும்பை: மொபைல் போன் சந்தையை கலக்கிய, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், அடுத்து, 'கிகாபைபர்' திட்டம் மூலம், மாதம், 600 ரூபாய் கட்டணத்தில், 'பிராட்பேண்ட், டிவி' தொலைபேசி வசதிகளை, விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது.






ரிலையன்ஸ் ஜியோ தற்போது, மும்பை மற்றும் டில்லியில், சோதனை அடிப்படையில் இச்சேவையை இலவசமாக வழங்கி வருகிறது. எனினும், 'ரூட்டர்' பயன்பாட்டிற்கு, ஒரு முறை டெபாசிட்டாக, 4,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இச்சேவையில், வினாடிக்கு, 100 மெகாபைட் வேகத்தில், 100 ஜி.பி., தகவல்களை பதிவிறக்கலாம். விரைவில் இச்சேவையை, நாடு முழுவதும் விரிவுபடுத்த, ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

மாதம், 600 ரூபாய் கட்டணத்தில், இணையம், தொலைக்காட்சி, தொலைபேசி சேவைகள் வழங்கப்பட உள்ளன.அத்துடன், குரல் வழி உத்தரவு சேவை, காணொலி காட்சி, மெய்நிகர் வீடியோ விளையாட்டு, பொருட்கள் வாங்குவது, 'ஸ்மார்ட்' வீடுகளில் மின்னணு சாதனங்களை இயக்குவது உள்ளிட்ட வசதிகளை நுகர்வோர் பெறலாம். இதற்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'டென் நெட்ஒர்க்ஸ், ஹாத்வே கேபிள், டேடா காம்' ஆகிய நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளது. விரைவில், இந்நிறுவனங்களில், பெரும்பான்மை பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.





இந்நிறுவனங்கள் ஏற்கனவே, கேபிள், 'டிவி' தொழிலில் உள்ளதால், அவற்றின் கீழ் உள்ள, 27 ஆயிரம் கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம், 1,100 நகரங்களில், ரிலையன்ஸ் ஜிகாபைபர் சேவை வழங்கப்படும். ரிலையன்ஸ் ஜிகாபைபர் சேவை அறிமுகமாவதால், பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள், கவர்ச்சிகரமான பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன.


ஓராண்டிற்கு இலவசம்:


ரிலையன்ஸ் ஜியோ கிகாபைபர் சேவையில், ஒருவர், மாதம், 600 - - 1,000 ரூபாய் வரை செலுத்தி, வீட்டில் உள்ள, 40 மின்னணு சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். வினாடிக்கு, 100 மெகாபைட் வேகத்தில், 100 ஜி.பி., தகவல்களை இலவசமாக பதிவிறக்கலாம். தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் சேர்க்கப்படும். இச்சேவைகள் அனைத்தும், ஓராண்டிற்கு இலவசமாக வழங்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-201916:35:31 IST Report Abuse
ஆரூர் ரங் முடிந்தவரை வீட்டில் லேண்ட் லைனைப் பயன்படுத்துங்கள் செல்போன் டவர் கதிர்வீச்சினால் வரும் ஆரோக்கியதுக்கு வரும் ஆபத்துக்களைக் குறைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
24-ஏப்-201913:50:13 IST Report Abuse
பிரபு ஏன் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் இப்படிப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஏப்-201913:28:50 IST Report Abuse
Nallavan Nallavan ஹையா ..... ரிலையன்ஸ் பத்தி நியூஸு வந்திருச்சு ..... மோதியைக் கோர்த்து உட்டு கமெண்ட்டு போட்டு அரிப்பைச் சொறிஞ்சுக்க வசதி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X