21 ஆண்டு கால தொடர் வெற்றி என்னாகும்? புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளம் அச்சம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஒடிசா தலைநகர், புவனேஸ்வர் லோக்சபா தொகுதியில், பிஜு ஜனதா தளத்தின், 21 ஆண்டு கால வெற்றி வரலாறு என்னாகும் என, அக்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.






ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் நகரை உள்ளடக்கிய, புவனேஸ்வர் லோக்சபா தொகுதிக்கு, நேற்று தேர்தல் முடிந்துள்ளது. இங்கு ஏற்கனவே, 16 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், எட்டு முறை காங்கிரஸ், மூன்று முறை, பா.ஜ., மற்றும் ஐந்து முறை, பிஜு ஜனதா தளம் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஒடிசாவில், 19 ஆண்டுகளாக, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி, ஆட்சியில் உள்ளது. அதேபோல், புவனேஸ்வர் தொகுதியிலும், 1998 முதல், பிஜு ஜனதா கட்சியே, லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய, எம்.பி., பிரசன்ன குமார் பதாசனி, தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.இந்தத் தேர்தலில், அவரை, பிஜு ஜனதா தளம், 'கழற்றி' விட்டுள்ளது. மாறாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அனுப் பட்நாயக்கை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜ.,வில் விருப்ப ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அபராஜிதா சாரங்கி வேட்பாளராகியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜனார்தன் பதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் அரசின் மீதான அதிருப்தி அலை பரவலாக உள்ளது. ஆனால், வேட்பாளராக உள்ள, போலீஸ் அதிகாரி அனுப் பட்நாயக்கின் பிரசார ஸ்டைல், மக்களை சந்தித்து பேசும் விதம், வாக்காளர்களை கவர்ந்துள்ளது.





அதேபோல், பா.ஜ., வேட்பாளர் அபராஜிதா சாரங்கி, நவீன் பட்நாயக்கின் ஆட்சியில், ஒடிசாவில் வளர்ச்சி ஏற்படாத நிலை குறித்து,பிரசாரம் செய்துள்ளார். இதற்கிடையில், வேலைவாய்ப்பு இல்லாமல், பல்வேறு மாநிலங்களுக்கும் இடம் பெயர்ந்த குடும்பத்தினர், விவசாயிகளின் ஓட்டை, மார்க்சிஸ்ட் கட்சி வளைத்துள்ளது. எப்படியானாலும், புவனேஸ்வரில் பிஜு ஜனதா தளத்தின், 21 ஆண்டு கால வெற்றி நீடிக்குமா, நின்று விடுமா என, அக்கட்சியினர் அச்சத்தில் உள்ளனர்.

- கே.எஸ்.நாராயணன் -
நமது சிறப்பு நிருபர்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஏப்-201908:16:50 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து தன் உடன்பிறவா சகோதரியுடன் சேர்ந்து கொள்ளையடித்ததுபோல் ivar செய்யவில்லை நேர்மையானவர்
Rate this:
Share this comment
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
24-ஏப்-201909:12:05 IST Report Abuse
Subramaniyan Balachandranகொள்ளை அடித்தவர் உடன் பிறவா சகோதரியும் அவர் குடும்பமும் என்பது நாடே அறியும். இந்த அம்மையாரை பயன்படுத்தி கொள்ளை அடித்தனர். திமுக என்பது கொள்ளை குடும்பம். அதிமுக என்பது தலைவி பெயரை பயன்படுத்தி மன்னார்குடி குடும்ப கொள்ளை. ஒரே வித்தியாசம் என்னவெனில் திமுக குடும்ப கொள்ளையில் பிறர் சாப்பிட முடியாது. ஆனால் அதிமுக கொள்ளையில் சிறு தொண்டன் கூட பங்கு கிடைக்கும். தொண்டன் தலைவன் ஆக அதிமுகவில் முடியும். ஆனால் திமுக, இந்திரா குடும்ப கட்சி இரண்டிலும் முறையே திருக்குவளையாரின் வாரிசுகள் மட்டுமே தலைமை பதவி பெற முடியும்/ இந்திரா குடும்ப சொம்பு தூக்கிகள் மட்டுமே தலைமை பதவி பெறமுடியும். எது தேவலை என்பதை மக்கள் முடிவெடுத்து அதிமுகவிடமே கொடுத்துவிட்டார்கள். இந்த முறையாவது தேர்தலில் ஏதாவது நல்ல மாறுதல் வருமா என்று காலம் தான் தீர்ப்பு சொல்லவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:41:22 IST Report Abuse
Srinivasan Kannaiya தொடருவது கஷ்டம்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X