பிலிப்பைன்ஸ் நில நடுக்கம்; பலி 16 ஆக உயர்வு

Added : ஏப் 24, 2019
Advertisement
பிலிப்பைன்ஸ் நில நடுக்கம்; பலி 16 ஆக உயர்வு

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இந்நாட்டின் லுஸான் தீவில் நேற்று முன்தினம் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடனும், மூவரின் இறந்த உடலும் மீட்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் ஒரு குழந்தை உட்பட இருவரின் உடல்கள் கட்டட இடுபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் ரிக்கார்டோ சாலட் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X