பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் மதநல்லிணக்கம்: கிறிஸ்தவ தலைவர் பாராட்டு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (53)
Advertisement

சென்னை: 'கிறிஸ்தவர்களின் வேதனையை அடுத்து, தலைப்பு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டது தினமலரின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது' என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர், இனியோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை, பெருமையாக கொண்டாடி வந்த தருணத்தில், நம் அண்டை நாடான இலங்கையில், கிறிஸ்தவர்கள் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல், எங்களுக்கு கடும் அதிர்ச்சியையும், சொல்லெண்ணா வேதனையையும் ஏற்படுத்தியது.


இந்த தாக்குதல் குறித்து, தினமலர் நாளிதழில், 'ஒ... சேசப்பா!' என, தலைப்பிட்டு செய்தியாக்கி இருந்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய உணர்வாக இருந்தது. மத அடிப்படையில், மக்களை பிரித்தாளும் சக்திகளிடம் தினமலர் அடிபணிந்து விட்டதோ என, நாங்கள் எண்ணினோம்; எங்களின் வேதனையை தெரிவித்தோம். இதன் அடிப்படையில் தினமலர் நாளிதழில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. இது, உண்மையிலேயே தினமலரின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தினமலர் நாளிதழின், இத்தகைய விளக்கம் தெரிவிக்கும் செயல், கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. இன்றைய இந்திய சூழ்நிலையில், சிறுபான்மை மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில், சில அமைப்புகள் மத வெறியை துாண்டும் வகையில், சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இதற்கு, சிறுபான்மை மக்கள் பலிகடாவாகி விடக்கூடாது என, கேட்டுக் கொள்கிறேன். எனவே, சிறுபான்மை மக்களாகிய எங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, விளக்கமளித்த தினமலர் குழுமத்திற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
30-ஏப்-201904:16:04 IST Report Abuse
meenakshisundaram இது காணாது
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
24-ஏப்-201916:18:12 IST Report Abuse
anand அது மதம் இல்லை..MLC கம்பெனி
Rate this:
Share this comment
Cancel
victor - auckland,நியூ சிலாந்து
24-ஏப்-201916:03:13 IST Report Abuse
victor தினமலர் நாடு நிலை பத்திரிகை இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. பிஜேபி அதிமுக இப்போ ரஜினி இந்து சார்பு நிலை இருப்பவர்களை மட்டும் ஆதரிக்கிற பத்திரிகையாக மாரி விட்டது என் சிறுவயதில் இதே தினமலர் தரமான பத்திரிக்கை என்ற ஒரு பெயர் இருந்தது இப்பொது துளி கூட அப்படி இல்லை என்பது வருந்த கூடிய கறியும்... தரமற்ற பத்திரிகை தினமலர்
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
25-ஏப்-201904:23:46 IST Report Abuse
 nicolethomsonநீங்க சின்ன வயசுல இருந்த மனநிலையிலா இப்போ இருக்கீங்க நீங்க கூட மதம் சார்ந்து எடுக்கும் நிலையில் இருந்து இப்போ மாறி இருக்கீங்க , கடவுள் மதம் இரண்டும் நம் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தி கொண்டது அதனை விடுத்து நடுநிலையில் இருப்பது என்பது கத்தி மேல் நடப்பது போல , யோசிங்க விக்டர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X