வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக சமாஜ்வாதியில் ஷாலினி யாதவ்

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (14)
Advertisement

லக்னோ: வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, சமாஜ்வாதி கட்சி சார்பில், ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.



மே, 19:


முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், மொத்தம் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த மூன்று கட்ட தேர்தலில், 26 தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இம்முறையும், வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், மே, 19ல் தேர்தல் நடக்கிறது.

பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அக்கட்சியின் கிழக்கு உத்தர பிரதேச பொதுச் செயல ரும், கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா போட்டியிடுவார் என, கூறப்படுகிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, ஷாலினி யாதவ் போட்டியிடுவார் என, சமாஜ்வாதி கட்சி நேற்று அறிவித்தது.


புதிய வேட்பாளர்:


ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்த, ஷியாம் லால் யாதவின் மருமகளான ஷாலினி, நேற்று முன்தினம், காங்கிரசிலிருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். மாநிலத்தில், 2017ல் நடந்த உள்ளாட்சி தேர்த லில், வாரணாசி நகராட்சி தலைவர் பதவிக்கு, காங்., சார்பில் போட்டியிட்டு, ஷாலினி தோல்வியடைந்தார்.



ஷாலினி யாதவ் கூறுகையில், ''அகிலேஷ் யாதவ் தலைமையில், கட்சி பணியாற்றுவேன். அவருடைய உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-201913:06:15 IST Report Abuse
Malick Raja அனைவரும் niraakarikkavendum
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
24-ஏப்-201911:38:35 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao வென்றாலும் சரி தோற்றாலும் சரி லாபம்தான், வென்றால் கேட்கவே வேண்டாம், தோற்றால் பிரதமரை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமை, எதிர் வரும் தேர்தல்களில் ஒரு நல்ல சீட்டைப் பெறலாம், வந்தா மலை, போனா கயிறு..
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
24-ஏப்-201911:26:06 IST Report Abuse
ganapati sb வாரணாசிக்கு ஜப்பான் பிரதாமரையே கங்கா ஆரத்தி செய்ய அழைத்து வந்து மேலே தொங்கிக்கொண்டிருந்த பல மின் கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு சென்று நகரை சுற்றி பல பைபாஸ் சாலைகள் அமைத்து நெரிசலை குறைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டி கங்கையை குறிப்பிடத்தக்க அளவில் தூய்மை செய்து பிரியங்காவையே நேரடியாக கங்கை நீர் குடிக்க வைத்து பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தி மாதிரி வளர்ச்சி கிராமம்களை உருவாக்கி ஆன்மிகம் குறையாமல் நவீன பாதையில் வளர்ச்சி பெற வைக்கும் நரேந்திரர் மீண்டும் வாரணாசியின் மக்கள் சேவகன் ஆவார்
Rate this:
Share this comment
நேர்கொண்ட பார்வை - Chennai,இந்தியா
24-ஏப்-201920:11:10 IST Report Abuse
நேர்கொண்ட பார்வைரொம்ப பெரிய செம்பா தூக்குறீங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X