பொது செய்தி

இந்தியா

துணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு முடிவு

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்ணி வெடிகளிலிருந்து பாதுகாக்க, துணை ராணுவ படையினருக்கு, புதிய வாகனங்களை கொள்முதல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.






இது பற்றி, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும், துணை ராணுவ படையினருக்கும், புதிய வாகனங்கள் வாங்க, 613.84 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்கள், குண்டு துளைக்காத சட்டைகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனத்தில், ஒரே நேரத்தில், ஆறு பேர் பயணம் செய்யலாம்.





அதேபோல், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய கமாண்டோ படையினருக்கு, 'ரிமோட்' மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வாங்க, 16.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம், கட்டடத்துக்குள்ளும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்த முடியும். மேலும், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, அதை அழிக்க, கமாண்டோ படையினருக்கு, இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும். மாடி அல்லது சரிவு பாதையில், இந்த வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த வாகனத்தில், 'எக்ஸ்ரே' உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
24-ஏப்-201911:32:06 IST Report Abuse
Jaya Ram போன் மூலமே 60 லட்ச ரூபாய் நகர்வாலா மூலம் கொள்ளையடித்த கும்பல் பேசுகிறது, பலநாடுகளில் சிறையில் இருந்த ஒரு குற்றவாளி மனிதர் குட்ரோச்சி ஒரு பண்பாளர் என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதில் இருந்தே தெரியவில்லையா இந்த ஒதுக்கியப்பணம் அப்படித்தானே ஆகும் என்று அவர்களின் நினைப்பு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-201907:36:19 IST Report Abuse
Srinivasan Kannaiya புதிய வாகனங்கள் வாங்க, 613.84 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது..ஊழல் செய்வதற்காகவே இந்த ஒதுக்கீடு
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
24-ஏப்-201907:47:22 IST Report Abuse
Darmavanவெறி பிடித்த எண்ணத்தின் வெளிப்பாடு....
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
24-ஏப்-201912:26:57 IST Report Abuse
vasanthanஇந்த திருட்டு கன்னையா வேறு பெயரில் ஒளிந்து கொண்டு அவன் கூட்டத்தின் திருட்டு புத்தியை சொல்லுறன்...
Rate this:
Share this comment
BJPKAARAN - Coimbatore,இந்தியா
24-ஏப்-201912:37:36 IST Report Abuse
BJPKAARANகாங்கிரெஸ்க்காரர்களுக்கு எதை பார்த்தாலும் ஊழலாகவே தெரிகிறது அது அவர்களின் பழக்கம்.அவர்களுக்கு நாட்டுப்பற்று துளியும் கிடையாது (சுதந்திரத்திற்கு பின்). அக்கட்சியின் தலைமைதான் உருப்படி இல்லையென்று பார்த்தால் அடிமட்ட தொண்டனும் அப்படித்தான் இருக்கிறான். அவர்கள் ரத்தத்தில் ஊழல் ஊறி சாக்கடையாக ஓட ஆரம்பித்துவிட்டது. இனி திருந்தப்போவது இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் நமக்கு நாமே வாய்க்கரிசி போடுவதும் ஒன்றுதான்....
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
24-ஏப்-201913:41:42 IST Report Abuse
parthaகன்னையாவிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்கமுடியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X