பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி: 'ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும், எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.






கடந்த, 2015ல், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால், ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2017ல், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த டிரம்ப், 2018, மே மாதம், ஈரான் மீது, மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வந்தார்.


ஏற்கவில்லை:


அத்துடன், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், நவ., 4க்குள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து, ஈரானில் இருந்து, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனினும், கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஆண்டுக்கு, 2.26 கோடி டன்னில் இருந்து, 1.50 கோடி டன்னாக குறைக்க ஒப்புக் கொண்டது.

ஆனால், தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத, டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும், ஆறு மாதங்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கினார். இந்த சலுகைக் காலம், மே 2ல் முடிவடைவதால், அடுத்து எந்த நாடும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.






சுமுக தீர்வு:


இது குறித்து, மத்திய வெளிவிவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த, அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா உட்பட, அனைத்து நாடுகளுடனும் கலந்து பேசி சுமுக தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


பெட்ரோல் விலை உயரும்:


காங்., செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: லோக்சபா தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை, மே, 23 வரை உயர்த்த வேண்டாம் என, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்று மாலை, பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு, 5 - 10 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளார். ஆனால், மக்களை அவர் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஏப்-201916:36:21 IST Report Abuse
இந்தியன் kumar இது வலிமையான அரசாங்கம் என்பதால் அமெரிக்காவையும் எதிர்த்து நிற்க முடிகிறது வெல்டன் இந்தியா
Rate this:
Share this comment
24-ஏப்-201917:32:47 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani)பெட்ரோல் விலையேற்றம் குறித்து மே 19 ஆம் தேதி தெரியும் அப்போது மறக்காமல் இந்த பதிவை பார்க்க வேண்டும் திரு இந்தியன் குமார்....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-ஏப்-201917:39:42 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதற்கு முன் இருந்த அரசாங்கமும் (2014 வரை) வலிமையான அரசுதானே. ஆம். "வலி" மையான அரசாங்கம்தான். வளர்ச்சியில் அதிவேகம் காட்டிய அரசுதானே. நம்பமுடியவில்லையா? பின்னே, கிலோ நாற்பது ரூபாயாக இருந்த பருப்பு விலையை கிலோ 200 ரூபாய் என்றாக்கி அமோக வளர்ச்சி காட்டியது, வெங்காயம், தக்காளி விலை கிலோ நூறு ரூபாய் எனவாக்கி அபரித வளர்ச்சி காட்டியது, அரசாங்கத்திடமிருந்த பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து அசுர வளர்ச்சி காட்டியது, வாஜ்பாய் அரசின்போது 48 ரூபாயாக இருந்த ரூபாயின் மதிப்பை 81 ரூபாய் எனவாக்கி வான்போற்றும் வளர்ச்சி காட்டியது, 2G , நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த், அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட், நேஷனல் ஹெரால்ட் என சிறிதும் அசராமல் இந்திய நாட்டில் தன் வலிமையை காட்டிய அரசல்லவா? இத்தனை புகழிருப்பதால் அது ஒரு "வலி"மையான அரசாங்கமே என்பதில் யாருக்கு சந்தேகமிருக்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
24-ஏப்-201914:39:41 IST Report Abuse
A.Gomathinayagam ஈரானுக்கு கட்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாயில் பணம் கொடுப்பது போல் தான் மற்ற நாடுகளுக்கும் தருவோம் என்று உறுதியாக சொன்னால் .நிச்சியம் டாலர் மதிப்பு குறையும் .நமக்கும் லாபம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஏப்-201913:24:58 IST Report Abuse
Nallavan Nallavan ஈரானில் இருந்து வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறுவது இது முதல் முறை அல்ல ...... ஒப்பந்தம் ஏற்பட்டது முதற்கொண்டே எதிர்த்து வருகிறது (காங்கிரஸ், திமுக சொம்புகள் கவனிக்க வேண்டிய விஷயம்) அமெரிக்கா ...... ஆகவே இந்தியா ஆட்சேபணை தெரிவித்து விட்டு இதைப் புறக்கணிக்கலாம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X