பொது செய்தி

இந்தியா

அருணாச்சல், நேபாளில் தொடர் நிலநடுக்கம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019
Advertisement

புதுடில்லி : அருணாச்சல பிரதேசம் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.





அருணாச்சல பிரதேசத்தில் நள்ளிரவு 1.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை 6.14 மணியளவில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.




தாடிங் மாவட்டம் நவ்பிசி பகுதியில் காலை 6.29 மணியளவில் 5.2 என்ற அளவிலும், 6.40 மணியளவில் 4.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நேபாள நாட்டின் தேசிய அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X