ராகுல் மீண்டும் சர்ச்சை பேச்சு

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (11)
Advertisement
ராகுல், அமித்ஷா,

புதுடில்லி : பிரதமர் மோடியை திருடன் என்று அழைத்து உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் அந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக தலைவர் அமித் ஷாவை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்.
ரபேல் வழக்கு நடைபெறும் போது அது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த ராகுல் வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, தேர்தல் பிரச்சாரத்தில் போகிற போக்கில் பேசிய ஒரு கருத்து பிரபலமாகி பிரச்சார வாசகமாகி விட்டதாக தெரிவித்தார்.
ராகுல் விளக்கத்தை ஏற்று உச்சநீதிமன்றம் நோட்டீசை திரும்பப் பெறவேண்டும் என்றும் அபிசேக் சிங்வி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் பா.ஜ., தலைவர் அமித்ஷா கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்று பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார், ராகுல்.
ஆனால், கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என தம்மீது ராகுல்கூறிய விமர்சனத்திற்கு பதிலளித்த அமித் ஷா, அது ஜோடிக்கப்பட்ட அரசியல் வழக்கு என்றும், நீதிமன்றம் தமக்கு சாதகமாக தீர்ப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
26-ஏப்-201920:53:58 IST Report Abuse
anand 150000 பேரை கொன்ற இவர் அம்மாவை விடவா?
Rate this:
Share this comment
Cancel
24-ஏப்-201911:51:08 IST Report Abuse
Chandran loose talk
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-ஏப்-201914:02:16 IST Report Abuse
Chowkidar NandaIndiaLoose talk...
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
24-ஏப்-201911:02:54 IST Report Abuse
M S RAGHUNATHAN இவர் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்றே தெரிகிறது. இவருடைய பேச்சால் காங்கிரஸின் பேச்சாளர்கள் நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். இன்று என்ன காமெடி செய்யப்போகிறாரோ அதை எப்படி சப்பை கட்டு கட்டி பேசுவது என்று தலையை பிய்த்து கொள்கிறார்கள். இவர் முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதையம் தற்போது ஜாமினில் வெளியில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டார். காங்கிரஸ் தலைவர்கள் யாரவது அவருக்கு நினைவூட்டவேண்டும். இவர் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு நீதி நியாயம் வழங்கப்போகிறாராம். 50 வருடங்களுக்கு இவருடைய கொள்ளுத்தாத்தா , பாட்டி, தந்தை, இவருடைய அன்னை தான் ஆட்சி செய்த்துள்ளார்கள். ஏன் நீதி மற்றும் நியாயம் மக்களுக்கு வழங்கவில்லை ? 1984 ல் சீக்கியர்களை கொலை செய்தவர்களை இவர் என்ன செய்தார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X