பொது செய்தி

இந்தியா

மே 19 வரை மோடி சினிமாவை வெளியிட தடை

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான பி.எம்., நரேந்திர மோடி சினிமாவை மே 19 ம் தேதி வரை வெளியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.



பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து காங்., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், படத்தை வெளியிட அனுமதி அளித்தது.
இதனையடுத்து படத்திற்கு யுஏ தரச்சான்று வழங்கப்பட்டு, ரிலீசுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதனை எதிர்த்து படதயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.



இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், படத்தை பார்த்து விட்டு அது தொடர்பாக ஏப்.,22 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து படத்தை பார்த்த தேர்தல் அதிகாரிகள், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தனர். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, இப்படத்தில் மோடியின் வாழ்க்கை கதையை விட அதிகமாக மோடியின் புகழ் பாடப்பட்டுள்ளது என தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அந்த அறிக்கையில், தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறுவதாகும். குறிப்பிட்ட கட்சியை முன்னிலைப்படுவதாக இப்படம் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கூடாது. கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நாளான மே 19 வரை இப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் பல காட்சிகளில் முக்கிய எதிர்க்கட்சி ஊழல் கட்சி எனவும், தாங்கள் ஏழைகளுக்கான கட்சி எனவும் காட்டப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்., 26ம் தேதிக்குள் இந்த அறிக்கை மற்றும் படம் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து பதில் அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
24-ஏப்-201920:37:40 IST Report Abuse
Mahesh கொஞ்சம் கூட நியாயம் இல்லாத EC யின் செயல் இது. மக்களுக்கு இந்த படத்தில் வரும் விஷயங்கள் தெரியக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்??
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
24-ஏப்-201916:42:17 IST Report Abuse
Natarajan தேர்தல் ஒரு நாள் முன்பு வரை பிரச்சாரம் அனுமதி. இந்த படம் அரசாங்க விளம்பரம் என்றால் தடை நியாயம். இது கோமேற்சியால் சினிமா . EC க்கு புத்தி இல்லை. உச்ச நீதி மன்றம் தடை நீக்க வேண்டும். EC காங்கிரெஸ் கை பாவை யோ ??
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-ஏப்-201915:58:44 IST Report Abuse
அசோக்ராஜ் துப்புரவு தொழிலாளிகளின் பாதங்களை சுத்தம் பண்ணியபோதே சாதாரண மனிதர்களின் மதிப்பைப் பெற்றுவிட்டார். சினிமா படம் காட்டி இழுக்க மீதி எதுவும் இல்ல. தடை சம்பவம் மூலம் எதிர்கட்சிகளின் பயமும் இயலாமையும் வெளிப்படையாகத் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X