பொது செய்தி

தமிழ்நாடு

நிழல் இல்லாத நாள்; கோளரங்கில் ஏற்பாடு

Added : ஏப் 24, 2019
Advertisement
நிழல் இல்லாத நாள், கோளரங்கம்

சென்னை : சூரியன் தலைக்கு மேல் நேராக வரும் நாள் என்ற முறையில் ஆண்டுக்கு 2 முறையே நிகழும் 'நிழல் இல்லாத நாள்' நிகழ்ச்சியைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னையில் இன்று நண்பகல் 12.07 மணிக்கும், வேலுாரில் 12.17 க்கும் பொருட்களின் நிழல் பூமியில் விழாது என்று அறிவித்து, அதை பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் காண்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கோளரங்கங்களில் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே நடக்கும் என்றும், அந்த நேரத்தில் தலைக்கு மேலே சூரியன் வரும்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மனிதர்கள் மற்றும் பொருட்களின் நிழல் பூமியில் விழாது என்றும் கோளரங்க விஞ்ஞானிகள் கூறினர்.
சென்னை பிர்லா கோளரங்கில், கம்பி ஒன்றை நட்டு அதைச் சுற்றி வட்டங்களை உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக நிழல் மறையும் நிகழ்வை விளக்கினர். நிகழ்வை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X