ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட மீனாட்சி லேகிக்கு காங்., தலைவர் ராகுலே உதவி செய்துள்ளார். ராகுல் மூலம் மீனாட்சி அதிர்ஷ்டம் அடித்துள்ளது.






பா,ஜ., செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி மீது கட்சியில் நல்ல பெயர் இல்லை. இம்முறை தேர்தலில் அவருக்கு சீட் தரக்கூடாது என்று பா.ஜ., முடிவு செய்திருந்தது.

ரபேல் விவகாரத்தில் ‛காவலாளியே ஒரு திருடனாக இருக்கிறார்'' என்று மோடி பற்றி சுப்ரீம் கோர்ட் கூறாததை கூறியதாக பேசினார் ராகுல். இதற்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் மீனாட்சி லேகி. இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து மீனாட்சி மீது பா.ஜ.,வுக்கு பாசம் ஏற்பட்டு மீண்டும் டில்லி தொகுதியில் போட்டியிட சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன:ராகுல் பேசியதும், மீனாட்சிக்கு போன் செய்த அருண் ஜெட்லி, தேவையான பாயின்டுகளை தெரிவித்து உடனே ராகுல் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருமாறு யோசனை கூறினார். அதன்படி மீனாட்சி செய்ததால் பிரதமரின் கவனத்தை ஈர்த்தார்.






கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரை அருண் ஜெட்லி தான் பா.ஜ.,விற்கு அழைத்து வந்தார். கம்பீருக்கு புது டில்லியில் சீட் தர வேண்டும் என்றும் அருண் ஜெட்லி கேட்டார். ஆனால் எப்போதும் சமாதான அரசியல் நடத்தி வரும் அமித்ஷா, மீனாட்சியை கவுரவப்படுத்த விரும்பினார். எனவே அவருக்கு புதுடில்லி தொகுதியை வழங்கிவிட்டு, கம்பீருக்கு கிழக்கு டில்லி தொகுதியை வழங்க ஏற்பாடு செய்தார்.

இந்த சம்பவத்தில் இருந்த அறியப்படும் நீதி யாதெனில், அதிர்ஷ்டம் எந்த நேரத்திலும் கதவை தட்டும் என்பது தான். இந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் மீனாட்சி லேகி அரசியல் களத்தில் காணாமல் போயிருப்பார்.


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25-ஏப்-201903:46:53 IST Report Abuse
Subramanian Arunachalam அவர் பி ஜெ பி கட்சியில் வெகு நாட்களாக உள்ளார் . உச்ச நீதி மன்றத்தில் இவர் ஒரு வழக்கறிஞர் . இவர் தந்தையும் ஒரு பிரபலமான வக்கீல் .
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
24-ஏப்-201918:56:58 IST Report Abuse
Rajavelu E. இதெல்லாம் ஒரு பொழப்பு.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
24-ஏப்-201918:10:03 IST Report Abuse
Pannadai Pandian மீனாக்ஷி லேகி அரசியல் காலத்தில் இருந்து காணாமல் போயிருப்பார் என்று கூறுவது மிகை. தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைத்திருக்காது ஆனால் கட்சி பணியில் தொடர்ந்திருப்பார். அவர்க்கு பின்னாளில் அதிஷ்டம் அடிக்காது என்று சொல்ல முடியாது. அடுத்து, கவுதம் கம்பீர் எப்போதோ பாஜக தான். சிறந்த நாட்டுப்பற்றாளர். பலமுறை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு பதிலடி - வார்த்தை போர் - கொடுத்திருக்கிறார்…...இவர் ஒரு நல்ல செலெக்ஷன்….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X