ஒப்புகைசீட்டு: ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி : ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளன.


ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓட்டுக்களை ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தி உள்ளன. ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறி இருந்தது.



ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இம்மாத துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. அத்துடன் 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை மட்டும் ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது என கூறியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
24-ஏப்-201919:55:29 IST Report Abuse
GMM ஒப்புகை சீட்டு: எதிர் கட்சிகள் மனு இம்மாத துவக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி. மீண்டும் மறு ஆய்வு மனு தாக்கல். தள்ளுபடிக்கு பின், 6 அல்லது 12 மாத இடைவெளி அரசு, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் பணி நெருக்கடி குறையும். வக்கீல்கள் அரசிடம் நீதிமன்றம் மூலம் விளக்கம்/விவரம் கேட்டு மனு தாக்கல் செய்கின்றனர். அரசு விதியை கூறி, மீறல் விவரம் கொடுத்து தாக்கல் செய்யும் போது, பணி அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சுலபமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
sriram - Chennai,இந்தியா
24-ஏப்-201918:20:24 IST Report Abuse
sriram 50% ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டுமென்றால் முடிவுகள் வெளியிட 5 நாட்கள் ஆகும். உச்ச நீதி மன்றம் அது தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்த பின்னும் கீறல் விழுந்த ரெகார்ட் போல அதையே சொல்லிக்கிட்டு திரியறாங்க
Rate this:
Share this comment
Cancel
விவசாயி - Tiruppur,இந்தியா
24-ஏப்-201918:18:11 IST Report Abuse
விவசாயி ஏன் ஊழல் வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என வழக்கு போடவில்லை...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X