புழுதிக்காட்டுப் புயல் கோமதி

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisementlatest tamil newsபுழுதி சுழன்றடிக்கும் சின்ன கிராமத்தில் பிறந்து, வறுமைக்கும் நடுவிலும் விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் கோமதி.திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலிதொழிலாளர்களான மாரிமுத்து-ராசாத்தி தம்பதியினரின் மகள்தான் கோமதி.


latest tamil news


வறுமை காரணமாக சரியான சாப்பாடு இல்லாத போதும் கூட சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டவர் கோமதி.அவரது ஊரில் உள்ள பள்ளியில் வகுப்பறையில் இருந்த நாட்களை விட மைதானத்தில் இருந்த நாட்கள் அதிகம் எப்போதும் ஒட்டம் ஒட்டம் ஒட்டம்தான்.
இவர் படித்து முடிக்கும் வரை ஒட்டப்பந்தயத்திற்காக அனைத்து பரிசுகளும் இவருக்கு மட்டுமே.தனது பெண்ணின் விளையாட்டுத் திறமையை முடக்கிவிடக்கூடாது என்பதற்காக இவரது தந்தை மாரிமுத்து ரொம்பவே உழைத்திருக்கிறார்.
தகுதிக்கு மீறிய விஷயம் என்றாலும் பராவாயில்லை என்று பலரிடம் கடன் வாங்கி மகளை பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள திருச்சி கல்லுாரியில் சேர்த்திருக்கிறார்.
கல்லுாரியில் இவரது ஒட்டத்திறமையை உணர்ந்த நிர்வாகம் இவருக்கு சிறப்பு பயிற்சியை வழங்கியது, சரியாகச் சொல்லப்போனால் முறையான ஒட்டப்பயிற்சியையே அப்போதுதான் துவங்கினார்.
காலை 3 மணி்க்கு எழுந்து மகளை தயார் செய்து ஐந்து கிலோமீட்டர் துாரம் சைக்கிளில் வைத்து ஒட்டிக்கொண்டு வந்து மெயின் ரோட்டில் விடுவார் மாரிமுத்து. அங்கிருந்து பஸ் பிடித்து கோமதி கல்லுாரி மைதானத்திற்கு காலை 4 மணிக்கு வந்துவிடுவார், பிறகு கடுமையான பயிற்சி, பயிற்சி முடிந்த பிறகு கல்லுாரி பிறகு மாலையில் மீண்டும் பயிற்சி பின் வீடு திரும்புவார் இவர் வரும் நேரம் சைக்கிளோடு வந்து மாரிமுத்து திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
எவ்வளவு மழை பெய்தாலும் குளிர்அடித்தாலும் இவர்களது பயணத்திலும் சரி பயிற்சியிலும் சரி மாற்றம் வந்தது இல்லை இதன் பயனாக சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிவந்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இவருக்கு பெங்களூருவில் மத்திய அரசின் வருமானவரித்துறையில் வேலை கிடைத்தது.
இதுவரை பெற்ற வெற்றியை நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் மட்டுமே கொண்டாடி இருக்கிறீர்கள் ஆனால் அது போதாது உன் வெற்றியை ஊர் உலகமே போற்றி கொண்டாட வேண்டும் அதுதான் சரியான வெற்றி என்று மீண்டும் தந்தை மாரிமுத்து சொல்ல முன்னிலும் வீறு கொண்டு வேகமெடுத்தார்.
தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொணடார் ஏழாவதாகவும்,நான்காவதாகவும் வந்தபோதும் தந்தை இவரை தளரவிடாமல் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் ,தோகா கத்தாரில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் பிரிவில் இப்போது முதலாவதாக வந்து தங்கம் வென்றுள்ளார். முப்பது வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள இவர் தனது தங்கம் வெல்லும் லட்சியம் காரணமாக திருமணத்தை தவிர்த்தும் வந்தவர்.
தனது தோளில் தேசத்தின் கொடியை ஏந்தி வலம் வந்தவர் கண்களில் மட்டும் கண்ணீர் காரணம் இந்த வெற்றியை பார்க்க தந்தை இல்லையே என்ற ஏக்கம்தான் இரண்டு வருடங்களுக்கு முன்தான் திடீரென இறந்து போனார்.
டி.வி.,க்களில் கோமதி வெற்றி பெற்றதை பார்த்த முடிகொண்டம் கிராமத்துக்காரர்கள் வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோமதியின் தாயாரைப் பார்த்து விஷயத்தை சொல்லி சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
150 சதுர அடி கொண்ட முடிகொண்டம் கிராமத்தில் உள்ள கோமதியின் வீடு முழுவதும் அவர் வாங்கிய கோப்பைகளும் பதக்கங்களுமே நிரம்பிக்கிடந்தன, இப்போதுதான் தாயின் ஆனந்த கண்ணீராலும் வீடு நிறைந்து காணப்படுகிறது.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
02-மே-201906:24:43 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy கிரிக்கட்டிற்கு கொடுக்கும் அரசு பொது மக்கள் ஆதரவிய ,இந்த மாதிரி ' தனி நபர் தகுதியை கொண்டுள்ள விளையாற்றிக்கும் தர வேண்டுகிறேன் ' ஏன் என்றால் இப்போது கிரிக்கெட் டென்னிஸ் போன்று பணக்காரர்கள் ஆட்டம் . ஆனால் வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ள கோமதிபோன்றவர்கள் 'தன முயற்சியினால் முன்னேறும் விளையாட்டிகளை நாம் ஆதரித்தால் பல கோமதிக்கு உண்டாக்கப்படுவார்கள் .அரசும் இந்த மாதிரி கிராம மக்களை சப்போர்ட் செய்ய வேண்டும் , குறைந்தது அவர்கள் நல்ல சாப்பாடாவது சாப்பிட காலனி மற்ற சிறிய உபகரணங்கள் வாங்க முன்வரவேண்டும் .
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
30-ஏப்-201911:49:57 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Even if one percent of profit which is made by IPL is given to encourage athletics and other games, our country will get more medals even in olympics. Our public will not mind paying Rs 1000 or Rs2000 to watch a T20 Cricket match but will not contribute even Rs 100 to encourage other sports.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஏப்-201918:03:34 IST Report Abuse
J.V. Iyer அற்புதம் ஆனந்தம் மனமார்ந்த வாழ்த்துக்கள் விடா முயற்சி பலன் தரும் என்பதை நிரூபித்துவிட்டார் இந்த பெண்மணி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X