இலங்கை குண்டுவெடிப்பு: அதிகாரிகளுக்கு சிக்கல்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
இலங்கை, குண்டுவெடிப்பு

கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, போலீஸ் தலைவர், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தடை தலைவர்கள் 24 மணி நேரத்திற்குள் மாற்றப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் சிறிசேன கூறியுள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு செயலர், போலீஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 21ம் தேதி(ஞாயிறு) ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.வலியுறுத்தல்

இந்நிலையில் இலங்கை அதிபர் சிறிசேன கூறுகையில், போலீஸ், முப்படை தளபதிகள், பாதுகாப்பு படை தலைவர்கள் 24 மணி நேரத்திற்குள் மாற்றப்படுவார்கள். அந்த துறைகள் மாற்றியமைக்கப்படும் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து,பாதுகாப்பு துறை செயலர் ஹேமாஸ்ரீ பெர்ணாண்டோ, போலீஸ் துறை தலைவர் ஜெயசுந்தரா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதனை, அதிபர் சிறிசேனவே, இரண்டு பேரிடமும் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், பாதுகாப்பு செயலர், அதிபரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.


latest tamil news

தகவல் மறைப்பு


இலங்கை பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர் லஷ்மணன் கிரியெலா கூறுகையில், தாக்குதல் குறித்த தகவல்களை, சில மூத்த உளவுத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். அவர்களிடம் தகவல் கிடைத்தது. ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேவாலயங்கள், ஓட்டல்கள், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியாவிடமிருந்து கடந்த 4ம் தேதி தகவல் கிடைத்தது. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அதிபர் சிறிசேன தலைமையில் நடந்தது. ஆனால், தகவல்கள் பகிரப்படவில்லை. இந்த உளவுத்துறை அதிகாரிகளை சிலர் கட்டுப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தகவல் இல்லை


இதனிடையே, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே கூறியிருந்தார். இது தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், கிறிஸ்ட்சர்ச் மசூதியில் தாக்குதலுக்கு பதிலடியே இலங்கை தாக்குதல் என்பதற்கான உளவுத்துறை தகவல் ஏதும் இல்லை எனக்கூறியுள்ளார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
25-ஏப்-201910:13:50 IST Report Abuse
pattikkaattaan இந்தியாதானே சொல்கிறது என்று அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் ... தீவிரவாதத்தின் கோரமுகத்தை இந்தியா ஏற்கெனவே சந்தித்துள்ளதால் , முன்கூட்டியே இலங்கைக்கு எச்சரிக்கை செய்துள்ளது .. முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பாவி ஜனங்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் .. பட்டால்தான் புத்தி வருமோ ..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:05:15 IST Report Abuse
Srinivasan Kannaiya அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் பிரச்சினைகள் தீராது ...இங்கே வேலை செய்யாதவன் அங்கேயும்தான் வேலை செய்யமாட்டான் .... அவரை அங்கே வைத்து வேலைவாங்குவதுதான் திறமைசாலியின் வேலை.,
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஏப்-201921:14:33 IST Report Abuse
blocked user பொறுப்பற்ற அதிகாரிகளை நீக்குவதே நல்லது... நீண்டகால அடிப்படையில் நன்மை பயக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X