கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டிக்டாக் மீதான தடை நிபந்தனையோடு நீக்கம்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

மதுரை: டிக்டாக் செயலியை பயன்படுத்தவும், தரவிறக்கம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையை ஐகோரட் மதுரை கிளை நிபந்தனையுடன் நீக்கி உள்ளது.



latest tamil news




மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news




இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை டிக்டாக் செயலி “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறுவர்,சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கம் வீடியோக்களை அனுமதிக்கக்கூடாது. பிரச்னைக்குரிய வீடியோக்களை வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்ற நிபந்தனையுடன் , ஐகோரட் மதுரை கிளை தடையை நீக்கியது.

இதனையடுத்து டிக்டாக் தரப்பில் கூறியதாவது: ஆபாச வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றினால், அதனை செயலியே தானாக நீக்கிவிடும். கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து சுமார் 6 மில்லியன் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
25-ஏப்-201913:20:15 IST Report Abuse
mohan நம் நாட்டின் முக்கிய வருமானம், இதுதான், இன்னும் பல தொழிலகள்...இதை சார்ந்து... மக்களுக்கு புரியாத இடத்தில, இந்த தொழில்களும், மக்களும் உள்ளனர்...
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
25-ஏப்-201910:14:58 IST Report Abuse
mohan ஏன், சைனா போல் எல்லாவற்றையும் தடை செய்து, கல்வி, வியாபாரம், கலாச்சாரம், உள்ள வெப் சைட் மட்டும் அனுமதி அளியுங்களேன்... எல்லாம் இந்தியாவில் முற்றி போய் விட்டது. மக்கள் சரியில்லை...இன்னும் பத்து வருடத்தில், இளைஞ்சர்களிடம், திருட்டு, வழிப்பறி, கொலை ஆகிய செயல்கள் அதிகரிக்கும். சரியான வேலை வாய்ப்பு இருக்காது... இதெல்லாம் மக்களுக்கு எப்போது தெரிந்து, எப்போது இந்தியா முன்னேறி... நடக்காது...ஒரு ரூபாய் மதிப்பை ஆயிரமாகி, அதில் குளிர்காய்பவர்கள் அதிகமாக இருப்பர்...
Rate this:
Cancel
25-ஏப்-201908:59:50 IST Report Abuse
ஆப்பு அதையும் மீறி ஆபாச வீடியோக்கள் வெளிவந்தால் 10 கோடி ரூபாய் அபராதத்துடன் 20 ஆண்டு சிறையும் டிக் டாக் அதிகாரிகளுக்கு விதிக்கப் படும்னு சொல்ல முடியாமப் போச்சா?ஒரு எழவும் நடக்ஜப் போவதில்லை. கொஞ்ச நாளைக்கு மூடிட்டு மொத்தமா தொறந்து உட்டுருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X