பொது செய்தி

தமிழ்நாடு

முறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
முறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி

ஓசூர்:ஓசூர் அருகே நடந்த, கோவில் தேர்த் திருவிழாவில், பக்தர்களை முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்து, பூசாரி ஆசி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில், பழமையான தர்மராஜ சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 380வது ஆண்டு தேர்த் திருவிழா, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று மதியம், தர்மராஜ சுவாமி தேரோட்டம் நடந்தது. தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது.


latest tamil news



விழாவில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்களை, முறம் மற்றும் துடைப்பத்தால், கோவில் பூசாரி அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அனைவரும், கூட்டத்தில் முண்டியடித்து, பூசாரியிடம் அடி வாங்கி, ஆசி பெற்றனர். இதன் மூலம், பேய், பிசாசு, காத்து, கருப்பு, பில்லி, சூனியம் விலகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
26-ஏப்-201900:50:31 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த கிருஷ்ணகிரி கிராமத்தார் திரு வீரமணியை அழைக்கக விட்டு விட்டார்களே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X