பொது செய்தி

தமிழ்நாடு

கொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன்

Updated : ஏப் 24, 2019 | Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன்

தஞ்சாவூர்:தஞ்சையைச் சேர்ந்த, 6 வயது சிறுவன், உலகில் உள்ள, 196 நாடுகளின் கொடிகளை பார்த்து, அந்நாட்டின் தலைநகரம், வரலாற்றை கூறி அசத்துகிறான்.

தஞ்சையைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம்; சிட்டி யூனியன் வங்கியில், பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுமியா, அக்குபஞ்சர் டாக்டர். இவர்களது மகன் மனோமிதன், 6; தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வருகிறான். இவன், பள்ளியில், பொது அறிவு போட்டியில், முதல் இடம் பிடித்துள்ளான். இவனது திறமையை கண்டு, பெற்றோர், பொது அறிவு தொடர்பான பயற்சிகளை, ஐந்து மாதங்களாக அளித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, மனோமிதன், 196 உலக நாடுகளின் கொடிகளை பார்த்து, அது எந்த நாட்டுடையது, அதன் தலைநகரம், வரலாறு ஆகியவற்றை துல்லியமாக கூறினான்.
மேலும், இந்தியாவில் இதுவரை பதவி வகித்த ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பற்றியும், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தனர், அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் என, அனைத்தையும், சிறிதும் யோசிக்காமல், உடனுக்குடன் கூறி வருகிறான்.

இதேபோல, இந்தியாவில் உள்ள கடல்களின் பெயர்கள், அவற்றின் தன்மை மற்றும் எந்தெந்த கடலில் என்னென்ன வகை உயிரினங்கள் வாழ்கின்றன என்பதையும் கூறி வருகிறான்.
தாய் சவுமியா கூறுகையில், ''அடுத்த கட்ட முயற்சியாக, இந்திய வரைபடத்தை வைத்து, அனைத்து நாடுகளுக்கும் செல்லும் வழிகள் குறித்து, பயிற்சி அளிக்க உள்ளோம். கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஏப்-201908:58:37 IST Report Abuse
ருத்ரா நினைவாற்றல் ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள் கண்மணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X