டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (1)
  'டவுட்' தனபாலு

காங்., தலைவர் ராகுல்: கடந்த, ஐந்து ஆண்டுகளில், மத்திய, பா.ஜ., அரசு, மக்களுக்கு வழங்கிய அநீதியை நீக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நீதி வழங்குவேன்.

டவுட் தனபாலு: புதிதாய் கட்சி துவங்கி, தேர்தலைச் சந்திப்பவர் கொடுக்க வேண்டிய வாக்குறுதி இது... இதை, நீங்க சொல்லலாமா... ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த காங்கிரஸ், சாமானிய, ஏழை எளிய மக்களுக்கு என்ன நீதியை வழங்கி இருக்குன்னு, எழும்பிய, 'டவுட்'டால் தான், இன்று எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கீங்க என்பதை மறந்துட்டீங்களா...!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்: பாக்., பற்றி பேசும் பிரதமர் மோடி, நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளில் மவுனம் காப்பது ஏன்?

டவுட் தனபாலு: நாட்டிலுள்ள பிரச்னைகளை முன்வைத்து, காங்., பிரசாரத்தை ஆரம்பித்திருந்தால், அதற்கேற்ப, பா.ஜ.,வும், பிரதமரும் பதிலடி தந்திருப்பாங்க... ஆனா, பாலகோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களின் மீது, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, 'டவுட்' எழுப்பி, ஆரம்பித்து வைத்ததே நீங்க தானே... அப்புறம் ஏன் இவ்வளவு பதறுறீங்க...!



-தேசியவாத, காங்., தலைவர் சரத் பவார்: விவசாய வளர்ச்சிக்கான எந்த கொள்கையும், மோடி அரசிடம் இல்லை.டவுட் தனபாலு: கடன் தள்ளுபடி செய்வதைத் தவிர, விவசாய வளர்ச்சிக்காக, நீங்க கூட்டணி வகிக்கும், காங்., அரசு, இவ்வளவு காலத்தில் என்ன செய்திருக்கு... இப்பவும், இதையே பிரதான வாக்குறுதியாக அளித்து, தேர்தலைச் சந்திக்கிறது... இது, விவசாய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்ததால் தான், பா.ஜ., அதைத் தவிர, பயிர் காப்பீடு, விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை, ஓய்வூதியம் போன்றவற்றில் கவனம் செலுத்துது... இதைத் தவிர, வேறு என்ன எதிர்பார்க்குறீங்க என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X