சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : ஏப் 24, 2019
Advertisement
சொல்கிறார்கள்

இன்றைய குழந்தைகளுக்கு அவசியமான பயிற்சி

கோடை பயிற்சி குறித்து கூறும், 'மான்டிசொரி' முறையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் விஜயா: கோடை விடுமுறை வந்துவிட்டாலே, பயிற்சி வகுப்புகளுக்கு பணத்தை கொட்டி பெற்றோர், குழந்தைகளை, 'பிசி' ஆக்கி விடுவர். உண்மையில், இவை அளிக்க முடியாத பயிற்சி, இன்று மிகவும் தேவையாக இருக்கிறது.ஷூ மற்றும் துணி வைக்கும் அலமாரியை, குழந்தைகளையே சுத்தம் செய்ய கூறினால், காசு கொடுத்து வாங்கி, பயன்படுத்தாமலேயே வைத்துள்ளதை உணர்ந்து, அனாவசிய செலவை தவிர்க்கும் பழக்கம், அவர்களுக்கு வரும். ரங்கோலி, மெஹந்தி மற்றும் படம் வரையவும், குட்டி குட்டி கைவினை பொருட்கள் செய்யவும், வீட்டில் உள்ளவர்களே கற்று கொடுத்து, ஊக்கப்படுத்தலாம்.அம்மா, அப்பா, குழந்தைகள், தாத்தா, பாட்டி என்று அனைவரும், வட்ட வடிவில் உட்கார்ந்து, மனம் விட்டு பேசலாம். அப்படி இல்லைெயனில், குழந்தையின் நண்பர்களை, இந்த கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இப்படி மனம் விட்டு பேசி, சிரிப்பதால், குழந்தையின் மனதை அழுத்தும், தேவையற்ற விஷயங்கள் நீங்கும்.மாலையில், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து, துவைத்த துணிகளை மடிப்பதால், குழுவாக வேலை செய்யும் எண்ணம், அவர்களிடம் ஏற்படும். இரண்டு குழந்தைகள் இருந்தால், பெரிய குழந்தையிடம், தம்பி அல்லது தங்கையை பார்த்து கொள்ள சொல்வதால், அவர்கள் இடையிலான பிணைப்பு, அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.பாட்டி, தாத்தா இருந்தால், மனதை பண்படுத்தும் நீதிக் கதை, ஸ்லோகம் கற்றுத் தரச் சொல்லலாம். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எனில், ஆளுக்கொரு உணவை சமைத்து, மொட்டை மாடியில் போட்டிகளை நடத்தி, குழந்தைகளை ஊக்கப்படுத்தி மகிழலாம். தோட்ட வேலை, வீடு சுத்தம், வாங்கி வந்த காய்கறிகளை பிரித்து வைப்பது, தோல் உரித்து தருவது, கீரை ஆய்வது என, செய்ய சொல்லலாம்.இன்றைய குழந்தைகளின் பிரச்னையே, வீட்டு பெரியவர்களிடம் அன்பு காட்ட தெரியாமல் வளர்வது தான். தாத்தா, பாட்டியின் தேவைகளை கவனித்து கொள்வது, தண்ணீர், மாத்திரை எடுத்துக் கொடுப்பது, 'பாத்ரூம்' அழைத்து செல்வது என, சிறு சிறு உதவிகளை செய்ய பழக்கலாம்.குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதாக, அம்மா, அப்பா இருவரும், ஒரு வாரத்திற்கு விடுமுறை எடுத்து, அவர்களுடன் இருந்து, அடுத்த வாரம், 'அம்போ' என, விட்டுச் செல்வதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக, ஒரு வாரம் அம்மாவும், அடுத்த வாரம் அப்பாவும் விடுமுறை எடுத்து, குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு, வார இறுதி விடுமுறையில், இருவருமாக சேர்ந்து அவர்களுடன் இருக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X