பொது செய்தி

இந்தியா

இலங்கையை எச்சரித்த இந்தியா

Added : ஏப் 24, 2019 | கருத்துகள் (1)
Advertisement


தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன், இதுபற்றி, இலங்கையிடம், இந்தியா எச்சரித்து உள்ளது தெரிய வந்துள்ளது.கோவையில், கடந்த ஆண்டு, ஐ.எஸ். அமைப்புக்கு, ஆதரவாக செயல்பட்ட, ஆறு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு போலீசார், கைது செய்தனர், விசாணையில், அவர்கள், ஹிந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்களை கொல்ல, சதி திட்டம் தீட்டி இருந்தது தெரிந்தது.அவர்களிடமிருந்து கைப்பற்றிய வீடியோக்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இலங்கையில் செயல்படும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன், ஹஷிம், இலங்கையில் உள்ள, இந்திய துாதரகம் மீது, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிந்தது.மேலும், இலங்கை, தமிழகம், கேரளாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து,இஸ்லாமிய குடியரசு அமைக்க, ஹஷிம் பிரசாரம் செய்து வந்ததும் தெரிந்தது.இலங்கையில், தற்கொலை படை தாக்குதல் நடத்தவும், ஹஷிம் திட்டமிட்டிருந்ததையும், என்.ஐ.ஏ.,அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இது பற்றி, இந்திய துாதரகம் மூலம், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்தனர். இது தொடர்பான ஆதாரங்கள், தகவல்கள், இலங்கை அதி காரிகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. குறிப் பாக, தேவாலயங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என, இலங்கையிடம், இந்தியஅதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், இதை, இலங்கை அரசு, தீவிரமாக எடுத்துக் கொள்ளாததால், பெரும் அசம்பாவிதத்தை, இலங்கை சந்திக்க நேரிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
25-ஏப்-201908:43:40 IST Report Abuse
Sathya Dhara பட்டால்தான் தெரியும்......இனியாவது நமது பிரதமர் மோதி ஜீ அவர்களின் அறிவுரையை ஏற்று ...அரசியல் செய்ய வேண்டும். இலங்கை ....தீவிர வாதிகளுக்கு பலி ஆகாமல். விரைவில் ஜப்பானிய தேசத்தின் கொள்கையை ஏற்று அமுல் படுத்தலாம். அங்கு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு அங்கீகாரம் கிடையாது. பிரஜா உரிமை வாக்கு உரிமை கூட கிடையாது என்று நினைக்கிறோம். வேறு வழி இல்லை. அரக்கர்களிடம் இருந்து நல்லோர்களை காக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X