அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை
4 தொகுதி வேட்பாளர்கள் கிலி

தேர்தல் நடத்தை விதிமுறைகள், தொடர்ந்து அமலில் இருப்பதால், தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தலைவிரித்தாடும், குடிநீர்,பிரச்னை,4 தொகுதி ,வேட்பாளர்கள்,கிலி

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள, நான்கு தொகுதிகளில், பல இடங்களில் கடும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதனால், பிரசாரம் களம் காணும் வேட்பாளர்கள், கதி கலங்கி உள்ளனர்.
'லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள், மே,27 வரை அமலில் இருக்கும்' என்று, தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதுவரை மாநில அரசுகள், புதிய நலத்திட்டங் களை அறிவிக்க முடியாது.


தமிழகத்தில், வேலுார் தவிர, 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 18ம் தேதியே முடிந்து

விட்டது.சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை மழையால், உடனடியாக நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு நீடிக்கிறது. குறிப்பாக, மே மாதத்தில் குடிநீர் பிரச்னை அதிகரிக்கும்.

'போர்வெல்' அமைத்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட, குடிநீருக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளும்போது, தேர்தல் ஆணையத்தில், அரசு அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் குடிநீர் பிரச்னை வேறுபட்டதாக இருக்கும்.அதற்கேற்ப பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டியிருக்கும். குடிநீர் அத்தியாவசியம் என்பதால், தேர்தல் முடியும் வரை காத்திருக்க முடியாது.


ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இருந்தால், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை, உடனடியாக அரசின்கவனத்துக்கு எடுத்து செல்வர். தற்போது, அதற்கான வாய்ப்பில்லை. பிரச்னை முற்றிய நிலையில் தான், மாவட்ட நிர்வாகங்களின் கவனத்திற்கே தெரிய வருகிறது.'தேர்தல் நடத்தை விதிமுறைகள், குடிநீர் பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தும். இதுபோன்றவிஷயத்தில்

Advertisement

விதிமுறைகளைத் தளர்த்துவது அவசியம்' என்கின்றனர், முன்னாள் உள்ளாட்சிபிரதிநிதி கள்.அரவக்குறிச்சி, சூலுார், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே,19ல் நடைபெற உள்ளது.


இத்தொகுதிகளில் பல்வேறு இடங்களில் கடும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்பதால், பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. குடிநீர் கிடைக்காதது குறித்து, வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வி எழுப்புவதற்கும், அதிக வாய்ப்பு இருக்கிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
25-ஏப்-201917:56:15 IST Report Abuse

Gopiஒழுங்கான மழைநீர் வடிகால் மற்றும் சேமிப்பு , ஒவ்வொரு தெருவிலும் ஜப்பான் முறைப்படியான மழை நீர் சேகரிக்கும் பாதாள குழிகள் அல்லது தற்போதும் யார் வீட்டிலாவது கிணறு இருப்பின் அவர்களுக்கு குடிநீர் வரியை ரத்து செய்து அவர்கள் வீட்டின் கிணற்றில் மழை வெள்ள நீரை ஊராட்சி, நகராட்சி மாநகராட்சி செய்யவேண்டும், இது போக விவசாயம் என்று வந்தால் கண்டிப்பாக உரம் செறிவூட்டப்பட்ட சொட்டு நீர் பாசனம் அதுவும் சூரிய ஒளி மின் தகடுகளால் என்று கட்டாய சட்டம் கொண்டுவரவேண்டும். வீடுவலில், உணவகங்கள் , தாங்கும் விடுதிகளில் குளிக்கும் துவைக்கும் தண்ணீரை வேறு தொட்டிகளில் நிரப்பி பாசி அல்லது நன்கு அறியப்பட்ட அறிவியல் முறைப்படி தூய்மைசெய்து பூமிக்குள்ளேயே விடுதல் செய்யப்படவேண்டும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஏப்-201908:38:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaகடந்த ஐம்பது ஆண்டு ஆட்சியாளர்களின் அவலங்கள்.. இலவசங்களில் செலுத்திய நாட்டத்தை மக்களும் அரசியல்வாதிகளும் குடிநீரில் காட்டி இருந்தால்..,. இதெல்லாம் வந்து இருக்காது.. இனி தமிழகம் பாலைவனமாவதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201908:00:01 IST Report Abuse

Manianஇதெல்லாம் ஒரு ப்ரச்சனையா? அம்மா குடி நீர் வியாபாரம், டாஸ்மார்க் மூலம் சரி கட்டிலாமே. அதெல்லம் மாமூலா நடக்குற வியாபாரம்தான். காசு வாங்குவது குறைக்க வேண்டும் . அவ்ளோதான்- அரசியல் திருடன் அடியார்க்கு நல்லான்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X