அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., - அ.ம.மு.க., வியூகம்:
தாக்குப்பிடிப்பாரா செந்தில் பாலாஜி?

கரூர்:அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள், தி.மு.க., வேட்பாளரான செந்தில் பாலாஜிக்கு எதிரான தாக்குதலை துவக்கி விட்டன. இதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என, எதிர்பார்த்து, தி.மு.க.,வினர்காத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க., - அ.ம.மு.க., வியூகம், தாக்குப்பிடிப்பாரா ,செந்தில் பாலாஜி?

அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில், தி.முக., சார்பில், மாவட்ட பொறுப்பாளர், செந்தில் பாலாஜி நிறுத்தப்பட்டுள்ளார்.இவர் ஏற்னகவே, அ.தி.மு.க., அரசில் அமைச்சர், அ.ம.மு.க.,வில் மாநில பொறுப்புகள் வகித்தவர்.

சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்து, வேட்பாளராகி விட்டார். இதனால், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சி நிர்வாகிகள், செந்தில் பாலாஜி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.தி.மு.க.,வுக்கு விழும் முஸ்லிம்களின் ஓட்டுகளை பிரிக்கும் வகையில், அ.ம.மு.க., சார்பில், சாகுல் ஹமீது நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த, 2011ல், அரவக்குறிச்சி தொகுதியில் தோற்ற செந்தில்நாதனையே, அ.தி.மு.க.,

மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. முதல்வர், இ.பி.எஸ்., லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை வைத்து உள்ளார்.

எனவே, செந்தில் பாலாஜியைதோற்கடிக்க, அவர்களும் வியூகம் அமைத்து உள்ளனர்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளனர். அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், நான்கு நாட்கள் தங்கி பிரசாரம் செய்ய உள்ளார்.

முன்னாள் அமைச்சர்பழனியப்பன், முன்னாள்அரசு கொறடா மனோகரன் ஆகியோர், வேட்பாளர் பெயர் அறிவித்த உடனே, தொகுதியில் பணிகளை துவக்கி விட்டனர்.அ.தி.மு.க., - அ.ம.மு.க., பிரசாரங்களில், செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் அனல் பறக்கும். அவர் அதை எப்படி சமாளிக்கப்போகிறார் என எதிர்பார்த்து, தி.மு.க.,வினர் காத்திருக்கின்றனர்.
ரூ.2.61 கோடிக்கு சொத்து

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர், செந்தில் பாலாஜி, நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விபரம்:செந்தில் பாலாஜி பெயரில், வங்கியில், 7 லட்சத்து, 39 ஆயிரத்து, 453 ரூபாய், அவர் மனைவி மேகலா கணக்கில், ரூ.43 ஆயிரத்து, 173 உள்ளது. மனைவி பெயரில், ரூ.8.70 லட்சம் ஆயுள் காப்பீடு,

Advertisement

மகள், நந்தினி பெயரில்,ரூ. 9 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜியிடம், 28.63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டெம்போ டிரக்ஸ், டொயோட்டா, இனோவா கார்கள் உள்ளன. மேலும், 11.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், மேகலாவிடம், 26.07 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளன.

இதன்படி, அசையும் சொத்துகளின் மதிப்பு, 80 லட்சத்து, 59 ஆயிரத்து, 127 ரூபாய்; வீடு மற்றும் நிலங்கள் என, அசையா சொத்துகள், 1.10 கோடி ரூபாய்க்கு உள்ளன. மனைவி, மகள் பெயர்களில் என, மொத்தம், ரூ.2.61 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.


சொத்து மதிப்பு, 2016 நவ., தேர்தலின் போது குறிப்பிட்டதை காட்டிலும், 14.91 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
02-மே-201907:56:12 IST Report Abuse

Krish Samiஎம் ஜி ஆர் பெயர் சொல்லி ஜெயலலிதா ஆசியில் அன்று வென்று அமைச்சருமான செந்தில் பாலாஜி மண்ணை கவ்வ வேண்டும். அது ஒன்றே நாளை இது போன்ற துரோகிகளுக்கு ஒரு முன் பாடமாக இருக்கும். மற்றப்படி செந்தில் பாலாஜி திருட்டு கட்சியில் சேர்ந்தது, அவர் தரத்துக்கு மிகவும் பொருத்தனான செயல். மனமார்ந்த சாபங்கள்.

Rate this:
Nai-tamlar - chennai,இந்தியா
01-மே-201905:40:43 IST Report Abuse

Nai-tamlarதோற்றோடும் இவரிடம், தான் எங்கு இருக்கணும்னே தெரியல , குழப்பத்தின் மொத்த உருவம் இன்னொரு குழப்பத்திடம் போய் நிற்கிறது கருமம் ....

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-ஏப்-201918:33:25 IST Report Abuse

Cheran Perumalஐயோ பாவம், இத்தனை ஆண்டுகளாக திமுக வுக்கு உழைத்த எவருக்கும் சீட்டு இல்லை.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X