பொது செய்தி

இந்தியா

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்

Added : ஏப் 25, 2019
Advertisement
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்

மலேரியாவால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஏப்., 25ல் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மலேரியா இல்லாத நிலை என்னிடமிருந்து துவங்கட்டும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமீபகாலமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மலேரியாவால் ஏற்படும் 'இறப்பு விகிதம்' கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


மலேரியாவுக்கு காரணம்:

மலேரியா 'பிளாஸ்மோடியம்' என்ற ஒட்டுண்ணி மூலமாக ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி 'அனோபிலிஸ்' எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. பின் இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது.


தடுப்பு மருந்து:

காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தொடர் சிகிச்சை அவசியம். ஏனெனில் நோய் முற்றும்போது, உடல் உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன. அனைத்து காலங்களிலும் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை, குளிர்காலங்களில் கவனம் அவசியம்.


4.3

உலகளவில் 2017ல் மலேரியாவால் 4.3 லட்சம் பேர் பலியாகினர். இதில் 93 சதவீதம் பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள். மேலும் இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்.


21

உலகளவில் 2017ல் 21.9 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 92 சதவீதம் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.


5

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X