பாக்.,கில் பயங்கரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (20)
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை என பாக்., பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.







பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெஹ்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார். அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறோம். இரு நாடுகளிடையே நல்ல நிலையும், நட்பையும் உருவாக்கும் என நம்புகிறோம்” என இம்ரான்கான் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் குர்ரம் தஸ்தகீர் கூறும்போது, “பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக பிரதமர் கூறியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. வெளிநாட்டில் இருந்து கொண்டு இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. இதன் மூலம் பிரதமர் இம்ரான்கான் ராஜ்ய ரீதியிலான மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். இதற்குமுன்பு இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என முரண்பாடான கருத்து கூறினார்” என்றார்.






பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி., ஹினா ரப்பானி கூறும்போது, 'இம்ரான்கான் இதுபோன்று கேலிக்கூத்தான கருத்துக்களை தொடர்ந்து கூறுவதால் நாட்டை பற்றிய எங்களின் கவலை அதிகரித்துள்ளது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-201918:03:32 IST Report Abuse
J.V. Iyer இப்படி பேசுவதால் இம்ரான்கானை சும்மா விடமாட்டார்கள், இந்த அறிவீலிகள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஏப்-201902:29:13 IST Report Abuse
meenakshisundaram அநேகமா பாகிஸ்தானில் இவிங்களை தவிர மிச்சமுள்ள மினாரிட்டிகளை தவிர எல்லோருமே பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் சாப்பிடற சாப்பாடு அப்படிப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
25-ஏப்-201912:58:30 IST Report Abuse
Anand நீங்களும் உங்கள் பேச்சுக்களும். உலகமே அறிந்த விஷயத்தை முக்கி முனகி ரகசியமாக கூறுகிறான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X