ராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (18)
Advertisement

மஹாராஷ்டிராவில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு எதிரான, எம்.என்.எஸ்., எனப்படும், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர், ராஜ் தாக்கரேவின் பிரசாரம், சிவசேனா கூட்டணிக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.



4ம் கட்டம்:


மஹாராஷ்டிராவில் உள்ள, 48 தொகுதிகளுக்கு, நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், வரும், 29ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.இதில், மும்பையில் உள்ள முக்கிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பா.ஜ., கூட்டணியில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இடம் பெற்று இருந்தது.

இந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் பிரசாரம், சிவசேனா கூட்டணிக்கு பெரும் உதவியாக இருந்தது. மோடி தான் பிரதமராக வர வேண்டும் என, ஒவ்வொரு இடங்களிலும், ராஜ் தாக்கரே முழக்கமிட்டார். ஆனால் தேர்தலுக்கு பின், ராஜ் தாக்கரேவுக்கு, பா.ஜ., மற்றும் சிவசேனா உரிய முக்கியத்துவம் தரவில்லை. இதையடுத்து, இந்த தேர்த லில், நவநிர்மாண் சேனா கட்சியினர், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.




மராத்தி மொழி:


அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் மராத்தி மொழி பேசும் மக்கள் மத்தியில், பா.ஜ.,வுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, ஸ்டார்ட் அப் இந்தியா உட்பட பல திட்டங்களை, அவர் விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு, மராட்டிய மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதனால், மும்பை நகரில், பா.ஜ., மற்றும் சிவசேனா வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்படுமோ என, அந்த கூட்டணியினர் கலக்கத்தில் உள்ளனர்.சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் ஒன்றுவிட்ட சகோதரர்தான், ராஜ் தாக்கரே.

- சுனிதா தாஸ் -
சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஏப்-201903:55:11 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டிலிருந்து லாரியில் இந்த கூட்டங்களுக்கு வேலை செய்ய போயிருப்பாங்க. அப்படித்தான் கூட்டம் வருது. டிரம்ப் பேசும் மாநாட்டிற்கே தமிழ் நாட்டிலிருந்துதான் மக்கள் சப்ளை செய்வதாக சொல்றாய்ங்க.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
25-ஏப்-201911:07:20 IST Report Abuse
இடவை கண்ணன் இவன் ஒரு இத்துப் போன, வெட்டிப் பயல்.. இவனோட கோட்டை என்று சொல்லப்பட்ட நாசிக், கல்யாண் ஊர்களில் கூட உள்ளாட்சி தேர்தலில் இவனை விரட்டி அடிச்சாச்சு ….
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-ஏப்-201910:26:41 IST Report Abuse
SENTHIL NATHAN ராஜ் தாக்கரே இவருக்கு கூட்டம் கூடும் ஆனால் வோட்டு விழாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X