நாளை மோடி வேட்புமனு; இன்று பேரணி

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை(ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்கிறார்; இன்று வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் மே 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை(ஏப்.,26) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் மோடி, அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.


பேரணியில், சாலை வழியாக சென்று, மக்களை சந்திக்கும் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களும், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
25-ஏப்-201913:54:52 IST Report Abuse
Narayanan Sakthi வாரணாசியில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் மோடி ஏற்கனவே என்ன செய்தார் இந்த தொகுதிக்கு என்று? உணர்வார்களா? எதோ இரண்டு அல்லது ஒற்றைப்படையிலேயே சென்று மக்களை சந்திக்காமல் ஒட்டு பெற்றால் அது நாட்டுக்கே அவமானம்.
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
25-ஏப்-201913:51:44 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் மோடி ஜி. உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-ஏப்-201910:27:00 IST Report Abuse
pattikkaattaan பிரதமர் ஆகும் ஆசையே இல்லாதவருக்கு பிரதமர் பதவியை மீண்டும் கொடுக்க துடிக்கிறார்கள் ... பிரதமர் ஆகலாம் என்று இருந்தவரை ஓரம்கட்டி திண்ணையில் உக்காரவைத்துவிட்டார்கள் .. இதுதான் உலகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X