பொது செய்தி

இந்தியா

மோடி மீதான புகார் மாயம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி : தேர்தல் கமிஷனின் இணையதள பக்கத்தில் பிரதமர் மோடி மீதான புகார் மட்டும் மாயமாகி இருப்பது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.






பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக இதுவரை மொத்தம் 426 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் ஏப்.,9 அன்று கோல்கட்டாவை சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் பிரதமர் மோடி மீது அளித்திருந்த புகார் மட்டும் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. மகாராஷ்டிராவின் லதுர் பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மக்கள் தங்களின் ஓட்டுக்களை புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய வீரர்களுக்கும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது தேர்தல் விதிமீறல் என மகேந்திர சிங் புகார் அளித்திருந்தார்.





பிரதமர் மீதான புகார் மாயமான தகவல் வெளியானதை அடுத்து, 2 நாட்களுக்கு பிறகு, பிரதமரின் பேச்சு குறித்து அறிக்கை அளிக்கும்படி மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. பிரதமர் மீதான புகார் இணையதளத்தில் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் கமிஷன், அந்த புகாரில் சில குழப்பங்கள் உள்ளது. தெளிவான நிலை இல்லாததால் தொழில்நுட்ப குழப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அறிக்கை தந்ததும் பிரதமர் மீதான புகாரும் வெளிப்படையாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-201914:53:50 IST Report Abuse
Nepolian S தேர்தல் முடிவுகள் வருவதற்குள் இன்னும் என்னென்ன மாயமாக போகுதோ
Rate this:
Share this comment
Nai-tamlar - chennai,இந்தியா
26-ஏப்-201900:31:39 IST Report Abuse
Nai-tamlarஅப்படித்தான் என்ன செய்வ?...
Rate this:
Share this comment
Cancel
25-ஏப்-201914:20:49 IST Report Abuse
Naushad Babjohn
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஏப்-201913:28:43 IST Report Abuse
தமிழ்வேல் இந்த குழப்பத்தில் ஆச்சரியம் ஏதும் இல்லை.ஸ்கீமுக்கு அர்த்தம் தெரியாமல் கோர்ட்டுகிட்டே கேட்ட புத்திசாலி நாம.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X