அதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ.,

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நடப்பு தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 545 இடங்களில் 437 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ, அறிவித்துள்ளது.

1980 ம் ஆண்டிற்கு பிறகு பா.ஜ., அதிக இடங்களில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. சில ஆண்டுகளாக பா.ஜ., தேசிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதும், 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்.,ன் பலம் சுருங்கி இருப்பதும் இந்திய அரசியலில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது.
இந்த முறை காங்., அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலங்களில் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும் பா.ஜ., 42 லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ., 433 இடங்களிலும், காங்., 440 இடங்களிலும் போட்டியிட்டன.
இதில் பா.ஜ., 116 இடங்களிலும், காங் .,206 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்., கூட்டணிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., 428 இடங்களிலும், காங்., 282 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் காங்., 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் காங்., 423 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. மேலும் சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 தேர்தல்களில் அதிக வேட்பாளர்களை நிறுத்திய கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் தான். 2014 ல் 503 இடங்களிலும், 2009 ல் 500 இடங்களிலும் போட்டியிட்டது. இருப்பினும் 2009 ல் 21 இடங்களில் மட்டுமே இக்கட்சி வெற்றி பெற்றது. இம்முறை சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மாயாவதி 139 இடங்களில் மட்டுமே தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். தேசிய அளவில் பா.ஜ., காங்.,க்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் உள்ள மிகப் பெரிய கட்சி பகுஜன் சமாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201920:22:18 IST Report Abuse
Ramakrishnan Natesan இதில் என்ன பெரிய விஷயம் ரூலிங் உள்ள பார்ட்டி என்றால் இப்படி தான் இதை போல தான் 2014 இல் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி போட்டது என்ன ஆயிற்று அதே கதைதான் இப்போ நடக்கு போகுது அதே 44 சீட் மாதிரி ஆகாமல் இருக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201916:24:11 IST Report Abuse
Ramakrishnan Natesan ஆடி அடங்கும் வாழ்க்கை யடா உனக்கு எவ்வ்ளவு மண்ணில் விழுந்து புரண்டாலும் 180 தான் சொந்தமடா
Rate this:
Share this comment
Cancel
baskaran A.C - al Jubail ,சவுதி அரேபியா
25-ஏப்-201916:01:31 IST Report Abuse
baskaran A.C மோடிஜி ய்க்கு எதிரான ஒவ்வொரு பதிவும் அவருக்கு கூடுதலான சாதகமாகவே அமைகிறது
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201916:50:55 IST Report Abuse
Ramakrishnan Natesanநண்பரே சாதகமாக ஊடகங்களால் அமைக்கப்படுகிறது இது 2014 அல்ல மோடி பற்றி அப்போ எவனுக்கும் தெரியாது இந்திரன் சந்திரன் இப்போ அவர் கஞ்சாகருப்பு லெவல் தான்...
Rate this:
Share this comment
R NAGARAJAN - Chennai,இந்தியா
25-ஏப்-201919:32:09 IST Report Abuse
R NAGARAJANசென்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பிரச்சாரம் செய்யவில்லை . இந்த தேர்தலில் மக்களே மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதே கூடுதல் பலம்...
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
25-ஏப்-201921:15:57 IST Report Abuse
Ramakrishnan Natesanஅப்போ ஒத்து கொள்கிறீர்கள் இவர் திணிக்கப்பட்ட ஊடகங்களால் கவனிக்க பட்டு வந்தவர் இப்போ நடக்காது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X