நெருப்புடன் விளையாடுவதா?; நீதிபதிகள் கோபம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (63)
Advertisement

புதுடில்லி : பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் ஒருபோதும் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.


இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உத்சவ் ஸ்பெயின்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மீது அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. அப்போது கூறிய நீதிபதிகள், கடந்த 3, 4 ஆண்டுகளாக பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்தி இயக்க நினைக்கிறார்கள். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்.


நீதித்துறை மீதான தாக்குதல்கள் குறித்து கடுமையான முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று எச்சரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து இன்று நண்பகல் 2 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


ஓய்வுபெற்ற நீதிபதி குழு


இந்த வழக்கை விசாரித்த அருண் மிஸ்ரா அமர்வு, பெயின்ஸ் புகாரை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும். அவருக்கு சி.பி.ஐ., இயக்குநர், மத்திய புலனாய்வுக்குழு தலைவர் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
26-ஏப்-201910:07:19 IST Report Abuse
southindian முதலில் இந்திய நீதி பதிகள் வெளியே பத்திரிகைகளுடன் பேசியது தவறு சக நீதிபதி பற்றி குறை சொல்லக்கூடாது . இவருக்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆயிற்று . தன் வினை தன்னை சுடும், இவர் நேர்மையானவராக பண்பாளராக இருந்தால் இந்திய கண்டத்தின் எழுதப்படாத சட்ட திட்டங்கள் கலாச்சார பண்பாடுகள் ஒற்றி நேர்மையான கருத்து நீதி வழங்கவேண்டும் யாருக்கும் யாருடைய தனிமனித உணர்வுகளுக்கும் கலாச்சாரத்தை மீறிய நீதி கொடுக்க தேவை இல்லை . தாங்கள் நீதி துறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறோம் என்ற தங்களுடைய செயல் உங்களுக்காவே திரும்பி வந்துள்ளது . கீலே படுத்துக்கொண்டு மேலே பார்த்து எச்சை உமிழ்ந்தால் அது நம் மீது தான் விழும் . இதை புரிந்தவர்கள் வாழக்கையில் சோதனை இல்லை
Rate this:
Share this comment
Cancel
thonipuramVijay - Chennai,இந்தியா
26-ஏப்-201901:59:17 IST Report Abuse
thonipuramVijay நீதித்துறையேயானாலும் அங்கு பணியாற்றுவது மனிதனே , சட்டத்தைவிட நீதிபதி என்ற மனிதன் என்றும் பெரியவனாகிவிட முடியாது அதனால் இவர் தவறு செய்திருப்பது நிரூபணமானால் தக்க தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
25-ஏப்-201920:03:43 IST Report Abuse
K.   Shanmugasundararaj நீதித்துறை லோயா போன்ற நீதிபதிகளை காப்பாற்ற முடியவில்லை.உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஓய்வுக்கு பின்பு , அதைவிடவும் குறைந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளுகின்றார். பின் எப்படி நீதித்துறையின் மீது மக்களுக்கு மதிப்பு/ நம்பிக்கை வரும். இந்த நாட்டில் எல்லோரும் வாயிலே வடை சுடுகின்றனர். பாவம் சாதாரண மக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X