பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (53)
Advertisement

புதுடில்லி : இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டிருப்பதாக பயங்கரவாதிகளின் பெயர்கள், முகவரி, போன் எண்களுடன் இந்திய உளவுத்துறை ஏப்.,11 அன்றே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.

10 நாட்களுக்கு முன்பே இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 3 பக்க விபரத்துடன் இலங்கை உளவுத்துறைக்கு, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. அதில், தற்கொலைப்படை தாக்குதல்கள் மட்டுமல்ல, குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பினர் இதை செய்ய திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டு, பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் முகவரி, அவர்களின் தொலைபேசி எண்கள், அவர்களின் பின்னணி உள்ளிட்ட விபரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கை நிர்வாகம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய உளவுத்துறை முன்பே எச்சரித்திருந்ததை அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்தியா எச்சரித்தது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை என அதிபர் சிறிசேனா கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NAMASIVAYAM.T - SIVAKASI,இந்தியா
30-ஏப்-201910:51:51 IST Report Abuse
NAMASIVAYAM.T என்னமோ நடக்குது
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
28-ஏப்-201907:09:27 IST Report Abuse
Karunan இலங்கை சீனா சார்பு எடுத்து விட்டபிறகு அவர்கள் நம் தகவல்களை உதாசீனம் செய்ததிற்கு உரிய பலனை அனுபவித்து விட்டார்கள் ...இங்கு சிலர் புல்வாமா இணைத்து பதிவிடுகிறார்கள் ..அமைவிடம் ,எதிரான மக்கள் இவற்றை எதிர்கொண்டு அங்கு செயலாற்ற வேண்டியிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
26-ஏப்-201910:49:07 IST Report Abuse
ஆப்பு நமக்கு புல்வாமாவில் நம்மளத் தாக்குனவங்க விவரம் ஒண்ணும் தெரியாது. அவ்வளவு அலட்சியம். ஆனா அடுத்தவன் நாட்டுல தாக்கப் போறவங்க பத்தி எல்லா விவரமும் தெரியுமாம். எச்சரிச்சாங்களாம்.முதல்ல தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போகாம இருக்க உங்க மூளையை பயன் படுத்துங்க.
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
30-ஏப்-201911:52:31 IST Report Abuse
TamilArasanஅட மூடனே புல்வாமா இருப்பது காஸ்மீரில் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை 99% அப்படி பட்ட பகுதிகளில் உளவு அமைப்புகள் செயல்பாடு மிகவும் கடினம்.... அமெரிக்கா உளவு அமைப்புதான் உலகின் மிக பெரிய அமைப்பு அப்படி இருந்தும் அவர்களால் இரட்டை கோபுரம் மற்றும் அவர்களின் ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தாக்குதலை தடுக்க இயலவில்லை - ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மும்பை சென்னை பெங்களூர் டெல்லி என்று எந்த பெரு நகரங்களிலும் ஒரு தீவிரவாத தாக்குதல் அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை காரணம் இந்த அரசின் தீவிரவாத எதிர்ப்பின் கடுமையான நடவடிக்கையே... அது மட்டும் இல்லை கடந்த ஆண்டு கோவை மற்றும் பிற தமிழக பகுதிகளில் இருந்து சுமார் 13 இஸ்லாமிய இளைஞர்களை இந்திய உளவு அமைப்பே தூக்கினார்கள் இவர்களை பிதுக்கி எடுத்ததில் இலங்கையில் அவர்களின் கிளை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கக்கி இருப்பார்கள்... சரி தமிழக மீனவர்கள் கதைக்கு வருவோம் கடந்து UPA அரசின் 10 ஆண்டு ஆட்சியின் போது சுமார் 950 தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றது ஆனால் மோடி அரசின் 5 ஆண்டு ஆட்சியின் போது ஒரு தமிழக மீனவர்கள்கூட இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்படவில்லை அது மட்டும் இல்லை இலங்கை நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களை மோடி பத்திரமாக மீட்டு வந்தார் இதன் அருமை எல்லாம் உனக்கு என்று விளங்க போகிறது.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X