பொது செய்தி

தமிழ்நாடு

பெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெரம்பலுார்: பொள்ளாச்சி சம்பவத்தை போன்றே பெரம்பலுாரிலும் பாலியல் கொடுமை குறித்த புகார் சமீபத்தில் எழுந்தது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்று ரிலீஸ் ஆகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மற்றும் அவரது வீடியோ கிராபர் ஆகிய இருவரும் இணைந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்கள் பலரை அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அதை வீடியோவாக எடுத்து வைத்து பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து, கடந்த ஏப்.21 அன்று வழக்கறிஞர் அருள் என்பவர் பெரம்பலுார் எஸ்.பி., திஷா மிட்டலிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இன்று நண்பகல் 12.30 மணியளவில், இந்த பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்றையும் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

பெரம்பலுார் கோர்ட் வளாகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த 2 ஆடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில், ஒரு ஆடியோ 2.26 நிமிடங்களும், மற்றொரு ஆடியோ 6.48 நிமிடங்களும் உள்ளது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீதான பாலியல் புகாரும் பாதிக்கப்பட்ட இளம்ணெ்ணின் ஆடியோ வெளியீடும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
25-ஏப்-201919:27:34 IST Report Abuse
மாயவரத்தான் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திமுக பின்னணியில் இருந்து அதிமுகவை மாட்டிவிட முயற்சித்தது தெரிய வந்தது. இதுவும் அதுபோல்தான் தெரிகிறது.திமுக ஆட்சியை பிடிக்க அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துவிட்டதாக தெரிகிறது.எப்படியோ இருவரின் சண்டையில் வெளிவராத கயவர்கள் வெளியே வந்து மாட்டினால் சரிதான்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
25-ஏப்-201916:53:00 IST Report Abuse
Jaya Ram ஆஹா பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக பெயரை கெடுப்பதற்காக செய்த முயற்சி தோல்வியானவுடன் இப்போ வேறொரு அரங்கேற்றமா ஆடியோ வெல்லாம் குரல் டெஸ்டில் நிற்காது என்று தெரிந்தும் இப்படி விளையாட ஆரம்பித்துள்ளனர் நடக்கட்டும் நாடகம் உண்மை கடைசியில் வெல்லும் இதுதான் தமிழக மக்களின் நம்பிக்கை. எம்ஜிஆர் இருக்கும்வரை கலைஞரால் அந்த முதல்வர் நாற்காலியினை நெருங்கமுடியவில்லை அதன் பின்னர் கட்சி இரணடாக பிளவுபட்டதால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் அதன் பின்னர் கட்சி இணைந்தவுடன் மீண்டும் பதவியினை இழந்தார் அதன் பின் இந்த ஜெயா செய்த சில குழப்பங்கள் காரணமாக முக்கியமாக அரசு ஊழியர் நீக்கம் ,வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம் போன்றவை கலைஞரை மீண்டும் பதவியில் அமர்த்தியது அதன் பின் மீண்டும் ஜெயாவின் ஆட்சி, கலைஞர் ஆட்சி என மாரி மாறி அமைந்தது அப்போதுதான் திமுகவினரின் விஸ்வரூபம் வெளிப்பட்டது வானளாவிய ஊழல் , அடுத்தவர் சொத்தினை அபகரித்தல், மின்வெட்டு போன்ற தாங்கவொண்ணா துயரங்களை ஏற்படுத்தியது எனவே ஜெயா மீண்டும் ஆட்சியினை பிடித்தார் இம்முறை திறம்பட ஆட்சி நடத்தினார் அவரின் முந்தைய செயற்பாடுகளினால் அவர் பதவி யில் இருக்கும்போதே சிறை சென்றார் மீண்டும் விடுதலையாகி வந்து ஆட்சி புரிந்தார் அடுத்துவந்த தேர்தல்களிலும் அவர் ஊழல் செய்ததாக கூறியதை மக்கள் ஏற்கவில்லை மீண்டும் அவருக்கு முதல்வர் பதவியினை அளித்தனர் எனவே உண்மை மக்களுக்கு தெரியும் எனவே காலம் பதில் சொல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X