கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., சொத்து மதிப்பு வெளியீடு

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (20)
Advertisement

சென்னை :2016 - 17 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கின்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.16.37 கோடி சொத்து உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.



ஜெ.,வின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஜெ., சொத்து விபரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று வருமான வரித்துறை துணை கமிஷனர் ஷோபா அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 2016 - 2017 ம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெ.,க்கு ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.



1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருந்தது. 2005-06 நிதியாண்டு முதல் 2011-12 வரை ஜெ.,க்கு ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் மாதம் 6 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-ஏப்-201906:38:26 IST Report Abuse
Natarajan Ramanathan இதோடு ஆறு கோடி தமிழர்களின் அபரிமிதமான அன்பும், தீயசக்தியை திணறடித்த திறமையும் தான் அவரது அளவில்லா சொத்து.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஏப்-201920:14:34 IST Report Abuse
blocked user சின்னம்மா கண்டைனர் கன்டைனராக எல்லாம் லவட்டி விட்டாரா? கோடிகளை அள்ளினார்களே... அவ்வளவும் எங்கே?
Rate this:
Share this comment
Cancel
25-ஏப்-201915:17:11 IST Report Abuse
bugindia இது காந்தி கணக்கில் காண்பிக்கபட்டதா? 🤣😅
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-ஏப்-201901:55:28 IST Report Abuse
மலரின் மகள்ஐயா உங்கள் கருத்து மிகவும் தவறானது. காந்தீய சிந்தனையாளர்களுக்கு வேதனை தரவல்லது. தாங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். காந்தி கணக்கு என்ன தவறாகவோ அல்லது ஏமாற்றுதலுக்காகவோ ஊழலாகோ செய்யப்பட்டதா? தேசப்பிதா தனக்கு வரும் அன்பளிப்பை கூட ஏழைகளுக்காக ஒதுக்கி விடுவார். அந்த கணக்கை எந்த பணத்துடன் இணைக்கிறீர்கள், உங்கள் கருத்து கண்டிக்க தக்கது என்று சொல்ல விரும்பவில்லை. ஏற்கமுடியாதது. தவறாக அறிந்துள்ளீர்கள் போலும். மஹாத்மாவுடன் விவேகானந்தர் பரமஹம்சரை வேண்டுமானால் ஒப்புமை படுத்தலாம். (நான் யாருடைய கருத்துக்களிலும் நுழைவது இல்லை, எனோ உங்கள் கருத்து வேதனை கொள்ள செய்கிறது, ஆகையால் இந்த பதிவு)....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X