பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே முறம் மற்றும் துடைப்பத்தால் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் அடிவாங்கும் விநோதமான வழிபாடு நடைபெறுகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் தர்மராஜாசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் 10வது நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அதன்படி, நேற்று (ஏப். 24) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்ததும், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் முறம் மற்றும் துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து 10 நாட்களாக விரதமிருந்த பூசாரி மீது சாமி அருள் வருவதாகவும், அப்போது அவர் முறம் மற்றும் துடைப்பத்தால் பக்தர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது.

தேரோட்டம் நிறைவுற்ற பிறகு, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு பூசாரிடம் முறம் மற்றும் துடைப்பத்தால் அடி வாங்கி, ஆசி பெற்றனர். இவ்வாறு முறம் மற்றும் துடைப்பத்தால் பூசாரியிடம் அடிவாங்கினால் பேய், பிசாசு, பில்லி சூனியம் விலகுவதோடு, குழந்தை வரம், கடனில்லா வாழ்க்கை போன்றவை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த விநோத வழிபாட்டில் பல்வேறு பகுதி பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஏப்-201914:41:47 IST Report Abuse
Chandran experienced man. now he does to others what he learnt from his wife. thodappakadaiyal adi vanginalum kariyaththula kanna irunthu kozhandaiya peththudonum ok...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X