பொது செய்தி

தமிழ்நாடு

புயல் வலுவடையும்; வானிலை

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி : தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் புயலாக மாறி வலுவடைய வாயப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






இந்திய பெருங்கடல் - வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது.மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு செய்தியில் தெரிவித்திருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய தெற்கு வங்க கடல் பகுதி நோக்கி நகரும்.பின்னர் மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி தமிழக மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டது.

இதன் காரணமாக வரும் 28,29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.





கன்னியாகுமரி மற்றும் சென்னை, மெரீனா கடலில் இன்று காலை முதல் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமனா அலைகள் வந்து கரையைத் தாக்குகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ''ஏப். 26 ல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வலுப்பெற்று 27 மற்றும் 28 தேதிகளில் இது புயலாக வலுப்பெறும்.
இதனால், தென்கிழக்கு கடல் பகுதியில் மீனவர்கள் 25, 26 ல் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், வட தமிழக கடற்கரை பகுதிக்கு 27 மற்றும் 28 தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை, 1, 500 கி.மீ., துாரத்தில் இருப்பதால் இவ்வளவு தான் கணிக்க முடியும்,'' என்றும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
26-ஏப்-201910:17:17 IST Report Abuse
oce இந்த புயல் சின்னத்தின் மையப்புள்ளியை பாருங்கள். அதன் சுழற்சி கிளாக்வைஸ் சுழற்சியாக உள்ளது. எனவே கடலுக்குள்ளேயே புயலை உருவாக்கி வங்காளத்தின் பக்கமாக செல்லும். சென்னை பக்கம் வராது. சென்னைப் பக்கம் வரும் புயல்கள் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் வரும். மீனத்தை சுக்கிரன் தாண்டினால் புயல் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201908:17:58 IST Report Abuse
Srinivasan Kannaiya சேதங்கள் இல்லாத மழை வேண்டும்... இயற்க்கையை அழிக்காத மழை வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
26-ஏப்-201908:14:18 IST Report Abuse
mindum vasantham கஜா புயல் வந்ததானால தான் கொஞ்சமாச்சும் மழை வந்துச்சு , சேதம் இருந்தாலும் மழையும் இருந்தது இதை வைத்து அடுத்து அரசியல் ஆரம்பம் 200 ருபாய் உடன்பிறப்பு ரெடி ஆஹ இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X