சிவசேனா, காங்.,கிற்கு கிலி தரும் புத்தகம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: நாராயண் ரானே இல்லாமல் மகாராஷ்டிர அரசியல் இல்லை. இவரது சுயசரிதை புத்தகம் சிவசேனாவுக்கும் காங்கிரசிற்கும் கிலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாராயண் ரானே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் சிஷ்யகோடி. பல ஆண்டுகளாக பால் தாக்கரேக்கு நெருக்கமாக இருந்த ரானேக்கு, திடீரென தாக்கரேயுடன் மனக்கசப்பு ஏற்பட்டது.


தனிக்கட்சி ஆரம்பித்த ரானே, பின் கட்சியை பா.ஜ., உடன் இணைத்தார். இப்போது அவர் பா.ஜ., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளா்ர. இப்போதும் கடும் இந்துத்வா தலைவரான இவர், சிவசேனாவுக்கு எதிராக இருக்கிறார்.
அவரது சுயசரிதைக்கு ‛இப்போது வேடிக்கை காத்திருக்கிறது: ஒவ்வொருவரையும் வெளிப்படுத்துவார்'' என்று பெயர். ரானேக்கு ரிதேஷ், நிதேஷ் என இரண்டு மகன்கள். இருவரும் தொழிற்சங்கவாதிகள். நிதேஷ் மும்பையில் உள்ள 60 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களைக் கொண்ட சங்கத்தை கையில் வைத்திருக்கிறார்.


நிதேஷ் கூறியதாவது: காங்.,கில் இருந்தபோது என் தந்தை அமைச்சராக இருந்தார். 2008 மும்பை குண்டுவெடிப்பு நடந்த பிறகு அப்போது காங்., முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் நீக்கப்பட்டார். அப்போது தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று ரானே எதிர்பார்த்தார். ஆனால் அசோக் சவான் முதல்வராக்கப்பட்டார். இதையடுத்து சோனியா குடும்பத்ததை தாக்கிப் பேசிய ரானேவை, கட்சியில் இருந்து நீக்கினர்.
2017 ல் காங்.,-யை விட்டு விலக்கிய ரானே சொந்தமாக கட்சி ஆரம்பித்து பின் பா.ஜ.,வில் சேர்ந்தார். இப்போது சுயசரிதை எழுதுகிறார். இது வெளியானால் சிவசேனா, காங்., பற்றிய பல ரகசியங்கள் வெளியாகி மகாராஷ்டிராவில் ரணகளத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
26-ஏப்-201910:45:14 IST Report Abuse
bal இந்த புத்தகத்தை மட்டும் வெளியிடலாமா தேர்தல் நேரத்தில்...இதற்கு காங்கிரஸ் ஏன் வாயை திறக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201908:16:32 IST Report Abuse
Srinivasan Kannaiya பால் தாக்கரேக்கு நெருக்கமாக இருந்த ரானேக்கு, திடீரென தாக்கரேயுடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த மனக்கசப்புதான் இத்தனை மதம் ,ஜாதி, ஏற்ப்பட காரணம் ஆகியது
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
25-ஏப்-201919:13:38 IST Report Abuse
bal இந்த ஆள் ஒரு நாடு மாரி...கட்சி தாவிய குரங்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X