கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (4)
Advertisement

மதுரை : தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் உடனே அகற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அனைத்து நீர் பிடிப்பு பகுதிகள் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்றக்கோரியும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

நீர்த் தேக்கப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்புகளால் வரும் 2020 ல் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''தமிழகத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். மேலும், துார் வாருவதற்கான இயந்திரங்களை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கொள்முதல் செய்யவேண்டும்,'' என்றும் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஏப்-201920:57:33 IST Report Abuse
Bhaskaran ரெண்டு கழகங்களும் மொத்த ஏரிகளை வித்துட்டாங்க நீதிமன்றம் சொன்னால் நாங்க கேட்கணுமா அடப்போய்யா என்று சொல்லுவாங்க
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
25-ஏப்-201920:38:04 IST Report Abuse
வந்தியதேவன் இதுக்கெல்லாம் மசிய மாட்டாங்க... நீங்களும் தொடர்ந்து உத்தரவு போட்டுகிட்டே இருக்கீங்க... அவங்களும் ஆட்டய போட்டுகிட்டே இருக்காங்க....? ஒண்ணும் செய்ய முடியாது...? இல்லண்ணா... சென்னை சுற்றி இருந்த 150 ஏரிகள ஆட்டய போட்ட அரசியல்வாதிகள்... ஒரு கிரவுண்டு பத்தாயிரம், இருபதாயிரம்...னு வித்தாங்க... அதையும் நம்ம சென்னை மக்கள் வாங்கி குடிசைய போட்டு.. கட்டிங் கவனிச்சி... பட்டா வாங்கி... அதை ஒண்ணுக்கு ரெண்டா வித்துட்டு.... அதையும் ஆபிசர்ஸ் வாங்கி மாடி வீட்டு கட்டி குடியிருந்தாங்க... சென்னை பெருவெள்ளம் வந்தப்ப.. வெள்ளம் வடியும் கால்வாய்மீது கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் மூழ்கின... இதற்கெல்லாம் காரணம்.... அரசியல்வாதிகள்+அரசு அதிகாரிகள்+குறைந்த விலையில் வீடு வாங்கிய சென்னை மக்கள்... இவர்கள் அனைவருமே குற்றவாளிகள்... அப்புறம்... இதுல ஒருத்தர்மீதும் மட்டும் குற்றம்சாட்டுவது தவறு.... ஒரு வீடோ நிலமோ வாங்கும்போது... ஆராய்ந்து... அது நீர்வழிப் பாதையா... ஏரிகால்வாய் பாசன வடிகால்வாயா.... ஏரிப் பொறம்போக்கா... நத்தம் பொறம்போக்கா... மேய்ச்சல் நிலமா... என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும்... அதைவிட்டுவிட்டு... இரண்டு லட்சத்துல.... பள்ளிக்கரணை ஒரு கிரவுண்ட் கிடைச்சதுன்னு... வாங்கி வீட்ட கட்டினா.... அந்த இடம்... சதுப்புநில ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்கால்வாயா இருக்கிறது... இதுதான் உண்மை... எதார்த்தம்....
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-201920:27:22 IST Report Abuse
Mani Then SRM University and Crescent should be first in list.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X