வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (22)
Advertisement

வாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது.
நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.







5 லட்ச தீபம்


2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது.





பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர்.


துணை முதல்வர் மற்றும் அவரது மகன் பங்கேற்பு

வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.தொரடர்ந்து அவர்கள் பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஏப்-201921:04:32 IST Report Abuse
Bhaskaran
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-ஏப்-201919:51:09 IST Report Abuse
Natarajan Ramanathan லக்னோவில் இருக்கும் எனது சகோதரன் இந்த பேரணிக்காக வாரனாசி சென்று உள்ளான். கழுதைக்கு கற்பூரத்தின் நறுமணம் தெரியாது. எச்ச பிரியாணியின் நாத்தம்தான் அதுக்கு பிடிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
25-ஏப்-201919:41:42 IST Report Abuse
Gnanam மோடிக்கு நிகர் மோடியேதான். இந்திய புனித மண்ணிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அசுரர்களை எதிர்க்க இறைவன் அனுப்பிய ஒரு தன்னலமற்ற தலைவன். இந்தியமண்ணில் ஊழல்வாதிகளையும் கொள்ளையர்களையும் ஒழித்துக்கட்ட வந்த இவரை நம்மக்கள் புரிந்து செயல்பட்டால் இந்தியா உலக நாடுகளில் கொடிகட்டி பறக்கும் வழிகாட்டி நாடாக திகளும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X