பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை நங்கநல்லூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம்

Added : ஏப் 25, 2019
Share
Advertisement
நம்மாத்துல பெரியவா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 12 மாதங்களுக்கு பல ஊர்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமையுடன் விஜயம் செய்து சங்கராபுரம் ஒரு பரிட்சயம் என்ற நோக்கில் பல சத்சங்கம் நடத்த கி . வெங்கடசுப்ரமணியன், மேனேஜிங் டிரஸ்டியாக உள்ள வைஷ்ணவி டிரஸ்ட்டாலும் அதற்கு பக்கபலமாக இருக்கும் பல ஆன்மீக அன்பர்களின் உறுதுணையுடன் தீர்மானிக்கப்பட்டது
நங்கநல்லூர், நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா

நம்மாத்துல பெரியவா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 12 மாதங்களுக்கு பல ஊர்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமையுடன் விஜயம் செய்து சங்கராபுரம் ஒரு பரிட்சயம் என்ற நோக்கில் பல சத்சங்கம் நடத்த கி . வெங்கடசுப்ரமணியன், மேனேஜிங் டிரஸ்டியாக உள்ள வைஷ்ணவி டிரஸ்ட்டாலும் அதற்கு பக்கபலமாக இருக்கும் பல ஆன்மீக அன்பர்களின் உறுதுணையுடன் தீர்மானிக்கப்பட்டது .

அதன்படி இத்திட்டத்தின் முதல் சத்சங்க நிகழ்ச்சி ஏப்ரல் 24ம் தேதி, புதன் அன்று நங்கநல்லூரின் தில்லை கங்கா நகரில் 19 வது தெருவில் உள்ள ஸ்ரீ சந்தானம் அவர்களின் கிரஹத்தில் மிகச் சிறப்பாக நடந்தது .

முதலில் ஸ்ரீ மஹாபெரியவா பிரதமைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது.

பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கி.வெங்கடசுப்ரமணியன் நீண்ட விரிவுரை ஆற்றினர்.

தனது உரையில் அவர் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுகிரஹத்துடன் 108 அக்னிஹோத்ரிகள் மாயவரம் அருகில் வரவிருக்கும் ஸ்ரீ சங்கராபுரம் என்ற ஒரு நூதன வேத கிராமத்தில் தங்கள் கிரஹத்திலிருந்து நித்ய அனுஷ்டானம் செய்தும் , வேத முறைப்படி 200 வித்யார்த்திகளுக்கு அவர்கள் மூலம் கிடைக்கப்போகும் குருகுல முறையிலான வேத அத்யனம் மற்றும் அதனுடன் கூடிய ஸ்ரீ மஹா பெரியவா கோயில், புஷ்கரிணி , நந்தவனம் , தேசிய பசுக்கள் கொண்ட கோசாலை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் .

சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X