இலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (47)
Advertisement
பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு

கொழும்பு : இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் இன்று வெளியானது.

இலங்கையில் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயம், ஓட்டல் என 9 இடங்களில் வெடிகுண்டு தாக்கல் நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க தொலைபேசி எண்களும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு செயலர் ராஜினாமாஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து அதிபர் சிறிசேன அறிவுறுத்தலை ஏற்று அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று ராஜினாமா செய்தார்.குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை எனவும், முப்படை தளபதிகளை மாற்றம் செய்ய போவதாக அதிபர் சிறிசேன முடிவு செய்தார். இதையடுத்து அதிபர் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஏப்-201910:33:05 IST Report Abuse
Yaro Oruvan எல்லா மதத்துலயும் தீவிரவாதம் இருக்கு.. இந்தமாதிரி ORGANISED தீவிரவாதம் இஸ்லாம்ல மட்டுந்தான் இருக்கு..நியூஸிலாந்துல ஒரு கிறுக்கன் (தீவிரவாதிதான்) லூசுத்தனமா செஞ்சான்..அவனை தூக்கிட்டு கொல்லனும் அதில் மாற்று கருத்து இல்லை. பாயிண்ட் என்னனா தனி மனிதனின் வெறுப்பு வெளிப்பாடு.. ஆனா இவனுங்க கும்பல்ல பொம்பள / சின்னபுள்ளைங்க / படிச்சவன் / பணக்காரன் / ஏழை எல்லா பயலுவளும் சேந்துக்கிட்டு திட்டம்போட்டு செஞ்சிருக்காங்க மதத்தின் பெயரால்.. இப்போ என்னாச்சு சிங்களன் ஏற்கனேவே செம காண்டுல இருக்கான் தமிழன் மேல.. அதுலயும் இனி தமிழ் துலுக்கங்கண்ணா வச்சி செய்வானுங்க.. இப்பவே வீடுகளை காலி செஞ்சி விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. இனி அவனுக ஆடுற ஆட்டத்துல மொத்த இனமும் பாடாபடப்போவுது.. இவனுகளை அப்பவே காட்டி கொடுத்துருந்தா இப்போ நிம்மதி மிஞ்சி இருக்கும். கேட்டா தெரியாதும்பாங்க.. சிங்களன் சும்மாவே டான்ஸ் ஆடுவான்.. இந்த பன்னாடைக அவிங்க கால்ல சலங்கைய கட்டிவிட்டு மிருதங்கமும் வாசிச்சிட்டானுவ.. வாங்கி கட்டுவாங்க மொத்தமா.. இது தேவையா? புள்ள குட்டிகளை பள்ளிக்கூடத்துல படிக்க வைங்கப்பா.. சாமி மனிதனுக்காக மனிதர்கள் சாமிக்காக அல்ல அப்படீன்னு சொல்லிக்கொடுங்க.. ..அதுக்கு அதுகளை பள்ளிக்கூடத்துல அதாவது பொதுவான பாடங்களை சொல்லிக்கொடுக்குற பள்ளிக்கூடத்துல படிக்க வைங்க.. அதுகளாவது வருங்காலத்துல மனுஷங்களா வாழட்டும்...
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
27-ஏப்-201908:47:23 IST Report Abuse
Anandan இன்னும் அமைதி மதம், இவர்கள் தீவிரவாதிகள் எனவே அவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று இன்னும் இஸ்லாமியர்கள் லாவணி பாடினால் அது அவர்களுக்குத்தான் ஆபத்து இப்போதாவது இதை அவர்கள் உணரவேண்டும். இன்னும் இப்படி தீவிரவாதத்திற்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அவர்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஏப்-201903:24:05 IST Report Abuse
 nicolethomson எல்லாம் பாப்பதற்கு பக்கத்து வீட்டு பசங்க மாதிரியே இருக்காங்க , சே எப்படித்தான் கொல்வதற்கு மனசு வருதோ , இதுங்கல்லாம் பொம்பளைங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X