நிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள் 'ஆன்லைனில்' ஏலம்

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (3)
Advertisement
நிரவ் மோடியின், 13 சொகுசு, கார்கள், 'ஆன்லைனில்', ஏலம்

மும்பை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி, மெகல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிரவ்மோடியின் சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி வைத்து, ஏலம் விட்டு வருகிறது.

.இந்நிலையில், நிரவ் மோடி, சோக்சி ஆகியோருக்கு சொந்தமான, 13 சொகுசு கார்களை, 'மெட்டல் அண்ட் ஸ்க்ராப் டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தின், இணையதளத்தில் ஏலம் விடுவதாக, அமலாக்க துறை அறிவித்தது.

இதில், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரின் அடிப்படை விலை, 1.3 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, போர்சே, மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., டொயட்டா இன்னோவா, ஸ்கோடா சூப்பர் எலகன்ஸ் ஆகிய கார்களும், ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. முன்னதாக, ஏலத்தில் பங்கேற்போர், கார்களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-201903:45:22 IST Report Abuse
Arul Krish hahaaha...no comments
Rate this:
Share this comment
Cancel
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
26-ஏப்-201903:44:56 IST Report Abuse
Arul Krish hahaha
Rate this:
Share this comment
Cancel
25-ஏப்-201921:37:29 IST Report Abuse
ஆப்பு ஏலம் விட்டு 11000 கோடி ரூவா தேத்திருவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X