பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி லக்ஷனா இதய சிகிச்சைக்கு உதவுங்கள்

Updated : ஏப் 26, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சிறுமி லக்ஷனா இதய சிகிச்சைக்கு உதவுங்கள்

காஞ்சிபுரம் : மதுராந்தகத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி இதய சிகிச்சைக்காக உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி லக்ஷனா. மூன்று வயதாக இருந்தபோதே, அவருக்கு அடிக்கடி கடும் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அப்போது செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தை லக்ஷனாவின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது முக்கியம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது லக்ஷனாவின் (11 வயது) உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அவளது பெற்றோர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
லக்ஷனாவுக்கு Aortic Valve Repair/replacement + ROSS procedure என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. ROSS procedure என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் Pulmonary Valve-ஐ வைத்தே Aortic Valve-ஐ சரி செய்யும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு, மருந்துகள், மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் ரூ. 3,60,000 தேவைப்படுகிறது. தங்களது சொத்தாக நினைக்கும் ஒரே மகளைக் காப்பாற்ற லக்ஷனாவின் குடும்பம் போராடிக் கொண்டிருக்கின்றது.

லக்ஷனாவின் தந்தை ஞானசேகரன் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார், அவரின் மாதச் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. தற்போது மருந்து, மருத்துவ பரிசோதனைக்கு என கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்து யாரிடம் உதவி கேட்பது என்கிற பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது இந்தக் குடும்பம்.

லக்ஷனாவுக்காக நிதி திரட்டும் முயற்சி...

சில வாரங்களுக்கு முன்பு லக்ஷனாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இங்கே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சிறுமிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த செய்திக்கு செவிசாய்த்து பல நல்ல உள்ளங்கள் மருத்துவத்துக்கு தேவைப்படும் நிதியை நன்கொடையாக வழங்கி இருந்தனர், அவர்களுக்கு இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 32 தனி நபர்களின் பங்களிப்பு மூலம், இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 60,000 திரண்டுள்ள நிலையில், இன்னும் மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி தேவையாக உள்ளது.
இச்செய்தியை நாம் அறிந்த நண்பர்கள் வட்டத்திடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், அவர்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் சிறிய தொகையும் உடனடியாக லக்ஷனாவின் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் தொகையாக சேரக்கூடும். லக்ஷனாவின் உயிரைக் காப்பாற்ற https://www.edudharma.com/fundraiser/lakashana-valve-replacement எனும் லிங்கிற்குச் சென்று நம்மால் ஆன பண உதவியைச் செய்யலாம். கொடை செய்வோம், சிறுமியின் உயிர்க் காப்போம்!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - pollachi,இந்தியா
27-ஏப்-201908:37:48 IST Report Abuse
ramesh PLEASE SEND BABY LAKSHNA CONTACT NO . I WILL TRY TO HELP FREE HEART SURGERY . 9865710170
Rate this:
Share this comment
Cancel
ramesh - pollachi,இந்தியா
27-ஏப்-201908:27:54 IST Report Abuse
ramesh ப்ளீஸ் செண்ட்லக்ஷ்நா போன் நம்பர் டு மீ. thank you
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-ஏப்-201907:46:08 IST Report Abuse
K.   Shanmugasundararaj பிரதம மந்திரியின் ஐந்து லட்சம் வரை சிகிச்சை பெறும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னாச்சு .காகிதத்தில் சக்கரை என்று எழுதினால் எவ்வாறு இனிக்காதோ அவ்வாறு தான் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும். மக்களை ஏமாற்றுவதில் மோடிக்கு நிகர் மோடியே .
Rate this:
Share this comment
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28-ஏப்-201914:22:40 IST Report Abuse
M Selvaraaj Prabu...
Rate this:
Share this comment
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28-ஏப்-201916:43:41 IST Report Abuse
M Selvaraaj Prabu...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X