டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (1)
Share
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி: காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாதவை; சாத்தியம் இல்லாதது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, தகுதியற்றவர்கள் தயாரித்துள்ளனர்.டவுட் தனபாலு: சாத்தியமானதை மட்டும் தான், தேர்தல் அறிக்கையில் சொல்லணும்கறது, சட்டமா என்ன... அப்படிப் பார்த்தால், எந்தக் கட்சியும், தேர்தல் அறிக்கையை வெளியிட முடியாதே... காங்.,கின் தேர்தல் அறிக்கை,
 'டவுட்' தனபாலு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி: காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், நிறைவேற்ற முடியாதவை; சாத்தியம் இல்லாதது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, தகுதியற்றவர்கள் தயாரித்துள்ளனர்.

டவுட் தனபாலு: சாத்தியமானதை மட்டும் தான், தேர்தல் அறிக்கையில் சொல்லணும்கறது, சட்டமா என்ன... அப்படிப் பார்த்தால், எந்தக் கட்சியும், தேர்தல் அறிக்கையை வெளியிட முடியாதே... காங்.,கின் தேர்தல் அறிக்கை, தகுதியற்ற நபர்களால் தயாரிக்கப்பட்டதாக, நீங்க விமர்சிக்குறீங்க... நாட்டின் நிதித்துறை அமைச்சர் பதவியே, தகுதி இல்லாதவரிடம் கொடுக்கப்பட்டிருப்பதாக, உங்க கட்சியைச் சேர்ந்த, சுப்பிரமணியன் சாமி சொல்லி வர்றாரே... இதை எப்படிப் பார்ப்பது என்பதுதான், என்னோட, 'டவுட்!'


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்தில், தற்போது நிலவும் முக்கிய பிரச்னைகளுக்கு, தி.மு.க., தான் காரணம்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., கூட்டணியில் நிரந்தரமாக இருப்பதாக முடிவு செஞ்சுட்டீங்க போல... அதுசரி, தி.மு.க., கூட்டணியில் இருந்தீங்களே... உங்க பிரச்னைகளைத் தீர்க்கத்தான், அவர்களோடு இருந்தீங்களா என்ற, 'டவுட்'டை, எவரும் எழுப்பிடப் போறாங்க...!


அரவக்குறிச்சி தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ஷாகுல் அமீது: அ.தி.மு.க., -- தி.மு.க.,வை விட, எங்களின் வாக்குறுதிகள், வீரியம் வாய்ந்தவையாக இருக்கும். மற்ற கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அதை சட்டரீதியாக சந்திப்போம்.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் பொதுச் செயலர் தினகரன், 'அடுக்குமாடி வீடு தருவோம்; ஆட்சியை மாற்றுவோம்'னு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எக்கச்சக்க வாக்குறுதிகள் கொடுத்தாரே... அவற்றில், ஒன்றையாவது நிறைவேற்றி இருக்காரா... அப்புறம், இதை எப்படி மக்கள் நம்புவாங்க என்ற, 'டவுட்' வரலையா...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X