அனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (12)
Advertisement
அனைவருக்கும், வங்கி, கணக்கு, பிரதமர், மோடி,  நன்றி,ராகுல்

ஜலோர்,: ராஜஸ்தானின் ஜலோரில் நடந்த, காங்., தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:கடந்த தேர்தலில், மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன், நரேந்திர மோடிக்கு, ஓட்டளித்தனர்.

ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், கடந்த, ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மோடி, மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமல் போன்ற நடவடிக்கைகளால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஐந்து ஆண்டுக்கு முன், நாட்டில், 'நல்ல காலம் வரப் போகிறது' என்ற கோஷம் இருந்தது. ஆனால், இப்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், 'காவலாளி திருடன்' என்ற கோஷம் தான் உள்ளது.

மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், மோடி இழைத்த அநீதிகளுக்கு, தீர்வு காணப்படும். ஏழைகளின் நலனுக்காக, 'நியாய்' திட்டத்தை செயல்படுத்த, காங்., உறுதி அளித்துள்ளது. மக்களின், 'மனதின் குரலை' கேட்டு, அதற்கேற்ப ஆட்சி நடத்தப்படும்





அரசு வேலை



மக்களுக்கு, வங்கி கணக்கு துவக்க வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்த கணக்கில் தான், நியாய் திட்டத்தின் கீழ், பணம் செலுத்தப்படும்.குடும்பத்தின், மூத்த பெண் உறுப்பினரின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும். மத்தி யில், காங்., ஆட்சி அமைந்தால், ஒரே ஆண்டில், 22 லட்சம் பேருக்கு, அரசு வேலை வழங்கப்படும்.இவ்வாறு, ராகுல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
27-ஏப்-201903:16:46 IST Report Abuse
 nicolethomson இனி உன்னை பப்பு தி மெண்டல் என்று அழைக்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
Xerox - ,
25-ஏப்-201922:11:59 IST Report Abuse
Xerox ஒன்றும் புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஏப்-201922:12:03 IST Report Abuse
blocked user நீதிமன்றம் என்ன சொன்னாலும் இன்னும் அதே பல்லவியை பாடிக்கொண்டு இருக்கும் இவரை நம்புபவன் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X