வாரணாசி:உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடப் போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, அஜய் ராய் என்பவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாரணாசியில், பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, அங்கு போட்டியிடும் முடிவில் இருந்து, பிரியங்கா பின்வாங்கியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், இங்குள்ள வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி, போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாமதம்
அவரை எதிர்த்து போட்டியிட்ட, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாவது இடத்தையும், காங்கிரசின் அஜய் ராய், மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்நிலையில், தற்போதைய தேர்தலிலும், இதே தொகுதியில், பிரதமர் மோடி, பா.ஜ.,
சார்பில் போட்டியிடுகிறார். இங்கு, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பிரதமர் மோடிக்கு, கடுமையான போட்டி கொடுக்கும் வகையில், காங்., தலைவர் ராகுலின் சகோதரியும்,கட்சியின் பொதுச் செயலருமான, பிரியங்கா போட்டியிடவுள்ளதாக, தகவல் வெளியானது.
உறுதி
இதுகுறித்து, ராகுலிடம் கேட்டபோது, 'வாரணாசி யில் போட்டியிடும், காங்., வேட்பாளர் யார் என்பது, 'சஸ்பென்ஸ்' ஆக வைக்கப் பட்டுள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள்' என்றார்.
பிரியங்காவிடம் கேட்டபோது, 'ராகுல் உத்தர விட்டால், வாரணாசியில் போட்டியிட தயார்' என, பொடி வைத்து பேசினார். இதனால், 'வாரணாசி யில், பிரியங்கா போட்டியிடுவது உறுதி' என, காங்., கட்சியினர் கூறி வந்தனர்.இந்நிலையில், வாரணாசி தொகுதிக்கான, காங்., வேட்பாளராக, அஜய் ராய், நேற்று அறிவிக்கப்பட்டார். இவர், கடந்த தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்.
வாரணாசியில் கணிசமாக உள்ள, பூமிஹர் சமுதாயத்தைசேர்ந்தவர்.அஜய் ராய் கூறுகையில், ''கட்சி மேலிடத்தின் கட்டளையை ஏற்று,
வாரணாசியில் களம் காண்கிறேன். இந்த முறை,
வெற்றி எனக்கு தான். ராகுல்,
பிரியங்கா ஆகியோர், இங்கு பிரசாரம் செய்யவுள்ளனர்,'' என்றார்.
வாரணாசியில் போட்டியிடாமல், பிரியங்கா, பின் வாங்கியதற்கான காரணம் குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உத்தர பிரதேசத்தில், ஆளும் கட்சியாக பா.ஜ., உள்ளது. எனவே, அந்த கட்சிக்கு, அதிகார பலம், தொண்டர் பலம் உள்ளது. மேலும், பிரதமர் மோடி, கடந்த தேர்தலில், 5.8 லட்சம் ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார்.
காங்., சார்பில் போட்டியிட்ட, அஜய் ராய்க்கு, 75 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன பிரியங்கா, இப்போது தான், நேரடி அரசியலுக்கு வந்துள்ளார். முதல் தேர்தல் முடிவே, பாதக மாக அமைந்து விட்டால், அவரது அரசியல் எதிர்காலம், கேள்விக்குறியாகி விடும். இதனால் தான், வாரணாசியில் போட்டியிடும் முடிவில் இருந்து, பிரியங்கா, திடீரென பின் வாங்கியள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (22)
Reply
Reply
Reply