பதிவு செய்த நாள் :
அனைவருக்கும் வங்கி கணக்கு:
பிரதமர் மோடிக்கு ராகுல் நன்றி

ஜலோர்:''வங்கியில் கணக்கு துவக்க, மக்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.

 வங்கி கணக்கு,பிரதமர், மோடி,ராகுல், நன்றி

ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. அநீதிஇங்குள்ள, ஜலோரில் நடந்த, காங்., தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் பேசிய தாவது: கடந்த தேர்தலில், மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன்,மோடிக்கு, ஓட்டளித்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை

நிறைவேற்றாமல்,கடந்த, ஐந்து ஆண்டுகளில், பிரதமர் மோடி, மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்குமற்றும் சேவை வரி விதிப்பு அமல் போன்ற நடவடிக்கைகளால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள், பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஐந்து ஆண்டுக்கு முன், நாட்டில், 'நல்ல காலம் வரப் போகிறது' என்ற கோஷம் இருந்தது. ஆனால், இப்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், 'காவலாளி திருடன்' என்ற கோஷம் தான் உள்ளது.

மத்தியில், காங்., ஆட்சிக்கு வந்தால், மோடி இழைத்த அநீதிகளுக்கு, தீர்வுகாணப்படும். ஏழைகளின் நலனுக்காக, 'நியாய்' திட்டத்தை செயல்படுத்த, காங்., உறுதி அளித்துள்ளது. மக்களின், 'மனதின் குரலை' கேட்டு, அதற்கேற்ப ஆட்சி நடத்தப்படும்.அரசு வேலைமக்களுக்கு, வங்கி கணக்கு துவக்க வசதி ஏற்படுத்தி கொடுத்ததற்காக,

Advertisement

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில், இந்த கணக்கில் தான், நியாய் திட்டத்தின் கீழ், பணம் செலுத்தப்படும். குடும்பத்தின், மூத்த பெண் உறுப்பினரின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும்.


மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், ஒரே ஆண்டில், 22 லட்சம் பேருக்கு, அரசு வேலை வழங்கப்படும்.இவ்வாறு, ராகுல் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (15+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஏப்-201900:22:26 IST Report Abuse

Pugazh Vநல்லவன் என்ற போர்வையில் நடமாடும் காட்டுமிராண்டி யை திருத்தவே இயலாது த.அளவுக்கு பைத்தியம் பிடித்துப்போன முட்டாள் தத்தி. இவரெல்லாம் படிச்சவரா? வாலாட்டிவிசுவாசம் நாகரிகம் மறக்க செய்துழிட்டது

Rate this:
BJPKAARAN - Coimbatore,இந்தியா
26-ஏப்-201917:49:05 IST Report Abuse

BJPKAARANமோடியின் நல்லாட்சிக்கு நன்றி என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டியதுதானே ராகுல்?

Rate this:
I love Bharatham - chennai,இந்தியா
26-ஏப்-201916:24:51 IST Report Abuse

I love Bharathamபேசாம பிஜேபி இலே சேர்ந்துவிடலாமே ......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X