பொது செய்தி

இந்தியா

கோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (15)
Advertisement
கோகோய், விவகாரம், பெண், நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, நியமனம்

புதுடில்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர், பாலியல் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக, மூத்த நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையில், அனைத்து நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.






அந்தக் குழுவில், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, பெண் நீதிபதி, இந்திரா பானர்ஜி இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தக் குழுவில், நீதிபதி ரமணா இடம்பெறுவதற்கு, புகார் கூறியுள்ள பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'தலைமை நீதிபதியும், நீதிபதி ரமணாவும் மிகவும் நெருக்கமானவர்கள். அவருடைய வீட்டுக்கு, ரமணா அடிக்கடி செல்வார். அதனால், குழுவில், அவர் இடம்பெறக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து, நீதிபதி, ரமணா விலகியுள்ளார்.இதையடுத்து ரமணாவுக்கு பதிலாக பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஏப்-201917:24:36 IST Report Abuse
Endrum Indian அப்படியென்ன பாலியல் புகார் ஒருதடவை அணைத்தான், இடுப்பை தொட்டான், அவ்வளவு தான் (இங்கே எங்க காம்ப்ளெக்சில் ஒரு கெழடு இருக்கின்றது, ஏதோ ஒரு விசேஷம் என்று அவன் வீட்டுக்கு போகும் எல்லா கிழவிகள் முதுகையும் அப்படியே தடவிக்கொடுக்கும் , அவனை பார்த்தாலே கிழவிகள் அவனிடமிருந்து தொலை தூரம் சென்று விடுவர்). அப்படிப்பார்த்தா பொள்ளாச்சி எல்லாம் இப்போ பெரம்பலூர் எல்லாம் எங்கோ ஆகாய அளவு பாலியல் தொல்லை என்று இருக்கவேண்டும். இதிற் உணர்த்தவே இந்த பாலியல் தொல்லை என்று நீதிபதியின் மேல், அதன் உண்மை தாக்கம் இவர்களுக்கும் புரியவேண்டும் , நீதிபதிகள் நேர்மையாக சரியான தீர்ப்பு கூறவேண்டும் இந்த மாதிரியான பாலியல் தொல்லைகளுக்கு என்று சொல்வது போல இருக்கின்றது இந்த கேஸ். இது வரை இவர்கள் தீர்ப்பு பலவை இப்படித்தான் இருந்திருக்கின்றன - போதிய தகுந்த சாட்சி/ஆதாரமின்மையால் பாலியல் தொல்லை , பாலியல் கொலை வழக்கு தள்ளுபடி.
Rate this:
Share this comment
Cancel
Bharathanban Vs - tirupur,இந்தியா
26-ஏப்-201912:35:55 IST Report Abuse
Bharathanban Vs இது பொய் புகார் என்றே வைத்துக் கொள்வோம்... நீதிபதி மீது என்பதால், விசாரணை குழு, விசாரணைக்கு முன்பே பொய் புகார் என்றெல்லாம் இப்போதே கூறியாகிவிட்டது. ஆனால் சாதரண ஆண் ஒருவர் மீது பெண் பொய் புகார் கூறினார் என்று வைத்துக் கொள்வோம்... என்ன நடக்கும்... சம்மந்தப்பட்ட ஆணை கூட்டிச் சென்று கும்மாங்குத்து கொடுத்து உள்ளே தள்ளவிடுவார்கள்... ஊடகங்களின் படங்கள் வெளியாகி நாறடிக்கும்... பல ஆண்டுகளுக்கு பின்னர் சாவகாசமாக அவர் தப்பு செய்யவில்லை என்று கூறி நீதிமன்றம் விடுவிக்கும்...
Rate this:
Share this comment
Cancel
26-ஏப்-201910:39:57 IST Report Abuse
ஆப்பு நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நீதித் துறையை நினைத்து விட்டால்....யாரை நம்பறதுன்னு புரியலையே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X