எனக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி| Dinamalar

'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி'

Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (13)
 'எனக்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தர சர்வதேச போலீசுக்கு இந்தியா நெருக்கடி'

மும்பை ''எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' தருமாறு, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுக்கிறது,'' என, மத போதகனான, ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளான்.ஜாகிர் நாயக் மீது, வெவ்வேறு மதத்தினர் இடையே, மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பிரசாரம் மேற்கொண்டது, இளைஞர்களை, மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியதுஉள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதையடுத்து, நாயக்கின், இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தை, மத்திய அரசு, 2016ல், தடை செய்தது. உடனே, தான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்பதை அறிந்த நாயக், திடீரென தலைமறைவானான். இதையடுத்து, இவனை, தேடப்படும் குற்றவாளியாக, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், 2017, ஜூனில் அறிவித்தது. அத்துடன், மும்பை நீதிமன்றத்தில், அவன் மீது, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது, மலேஷியாவில் பதுங்கியுள்ள, ஜாகிர் நாயக், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளான். அதன் விபரம்:கடந்த, ஒன்றரை ஆண்டுகாலமாக, எனக்கு, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்குமாறு, இன்டர்போல் அமைப்பிற்கு, இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.

இது தொடர்பாக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை கொடுத்த ரெட் கார்னர் நோட்டீசை, இன்டர்போல் ரத்து செய்துஉள்ளது.நான், சில நாடுகளிடம் விசாரித்ததில், எனக்கு இதுவரை ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது உறுதியானது. அதனால், எனக்கு ரெட் கார்னர் நோட்டிஸ் கொடுப்பதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வரத் துடிக்கும், மத்திய அரசின் நெருக்கடிக்கு, இன்டர்போல் பணியாது என, நம்புகிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X