வாரணாசி தான் என்னை பிரதமராக்கியது

Updated : ஏப் 25, 2019 | Added : ஏப் 25, 2019 | கருத்துகள் (9)
Advertisement
வாரணாசி, தான், என்னை, பிரதமராக்கியது,

வாரணாசி: வாரணாசி என்னை எம்.பி.யாக மட்டுமல்ல நாட்டின் பிரதமராக்கியுள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபா தேர்தலையொட்டி வராணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ள பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். முன்னதாக இன்று 6 கி.மீ. தொலைவிற்கு மெகா பேரணி நடத்தினார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியது,
இங்கு சமீபத்தில் மஹா கும்பமேளா நடந்தது. ஆனால் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த 5 ஆண்டுகளில் எந்த கோயில்களிலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை. இதுதான் பா.ஜ. ஆட்சியின் சாதனை.





இன்று நடந்த இந்த மெகா பேரணி பா.ஜ. கூட்டணி மீண்டும் வெல்லும் என்பதற்கும் இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டமுமே உதாரணம். இங்குள்ள. காசி எனக்கு நிறைய செய்து இருக்கிறது. காசி என்னை அதிகம் மாற்றி இருக்கிறது. வேதங்களை படித்ததன் மூலம் எனக்கு அரசியல் அறிவும் சமூகம் குறித்த பார்வையும் வந்தது. இந்த வாரணாசி தொகுதி என்னை எம்.பி.யாக மட்டுமல்ல நாட்டின் பிரதமராக்கியுள்ளது என்றார்.



கங்கை நதிக்கரையில் ஆராதனை



முன்னதாக 2 வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது.

பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர்.


மகனுடன் ஓ.பி.எஸ். பங்கேற்பு


வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.தொரடர்ந்து அவர்கள் பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201910:08:39 IST Report Abuse
Amreen இந்தியாவின் பாதுகாப்புக்கு வலிமையான பிரதமர் தேவை. இலங்கையில் நடந்தது நமக்கெல்லாம் ஒரு பெரிய படிப்பினை. இந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஓரளவு வலிமை படுத்த பட்டுள்ளது. மாநில கட்சிகளிடம் ஆட்சி வந்தால் தங்கள் பினாமி சொத்துக்களை காப்பாற்றவும் அவர்களுக்குள் சண்டை போட்டு பணத்தை பிரிக்கவும் நேரம் சரியாக இருக்கும் அப்புறம் எங்க நாட்டு பாதுகாப்பு. இலங்கையை போல் நம் நாட்டிலும் நடக்கும். இதை நம் புரிந்து கொண்டால் சரி. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ravimurugan - tanjore,இந்தியா
26-ஏப்-201908:59:51 IST Report Abuse
ravimurugan இத்தாலி மாஃபியா குடும்பத்தை சேர்ந்த பிரியங்கா வதேரா வாரணாசியில் போட்டியிடாமல் ஓடியதிலிருந்தே தெரிகிறது மோடியின் வெற்றி
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஏப்-201908:12:49 IST Report Abuse
Srinivasan Kannaiya வாரணாசி மக்கள் எது நல்லது என்று சிந்தித்து வாக்கு அளிப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X