பதிவு செய்த நாள் :
தீவிரம்!
தலைமை நீதிபதி மீதான
சதியை முறியடிக்க சுப்ரீம் கோர்ட் :

தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிரான சதி விவகாரத்தை முறியடிக்க, உச்ச நீதிமன்றம் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.கே. பட்நாயக் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் புகார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
புதிய மனு
'முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், மிரட்டும் வகையில், பொய் புகார் கூறப்பட்டுள்ளது' என, நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன், தீபக் குப்தா அடங்கிய, சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, வழக்கறிஞர், உத்சவ் சிங் பெய்ன்ஸ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில், புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'தலைமை நீதிபதிக்கு எதிராக, மிகப் பெரிய சதி நடக்கிறது. அவருக்கு அவப் பெயர் ஏற்படுத்தி, பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க, முயற்சி நடக்கிறது' என, கூறப்பட்டுள்ளது.இந்த மனுவையும், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

'தலைமை நீதிபதிக்கும், நீதித் துறைக்கும் களங்கம் ஏற்படுத்த, மிக பெரிய சதி நடக்கிறது. குறிப்பிட்ட சிலர், இதற்கான முயற்சியில்

ஈடுபட்டுள்ளனர். இதில், அடிவேரை கண்டுபிடிக்கும் வகையில், விசாரணை தீவிரமாக நடக்கும்' என, அமர்வு கூறியிருந்தது.
ஒத்துழைப்பு

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது: வழக்கறிஞர், உத்சவ் சிங் பெய்ன்ஸ் தாக்கல் செய்துள்ள, ஆதாரங்களை பார்க்கும்போது, தலைமை நீதிபதிக்கு எதிராக, மிகப் பெரிய சதி நடப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படும்.

இந்த சதி விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.கே. பட்நாயக் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது. சதி குறித்து முழுமையாக விசாரித்து, தனது அறிக்கையை, இந்தக் குழு தாக்கல் செய்யும்.இந்தக் குழு, சதி குறித்து மட்டும் விசாரிக்கும். தலைமை நீதிபதி மீது, முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகார் தொடர்பாக, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் விசாரணை தனியாக நடக்கும்.

நீதிபதி பட்நாயக் குழுவுக்கு, தேவைப்படும் போது, சி.பி.ஐ., - ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பு மற்றும் டில்லி போலீசார் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.அதேபோல், வழக்கறிஞர், பெய்ன்ஸ், தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.

சாதாரணமாக, வழக்குகளில், குறிப்பிட்ட சில ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு, வழக்கறிஞர் களுக்கு விலக்கு உள்ளது. ஆனால், இந்த வழக்கில், வழக்கறிஞர்தான், புகார் கூறியுள்ளார். அதனால், அவருக்கு எந்த விலக்கும் கிடையாது. விசாரணைக்

Advertisement

குழு கோரும் ஆவணங்களை, அவர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

பணக்காரர்கள்

முன்னதாக, இந்த வழக்கு, நேற்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, அமர்வு கூறிய தாவது:தலைமை நீதிபதி மற்றும் நீதித் துறைக்கு எதிராக, திட்டமிட்ட தாக்குதல் நடக்கிறது. நாட்டில் உள்ள பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள், நெருப்புடன் விளையாடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தை, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கலாம் என நினைக்கின்றனர்; அது நடக்காது.

நீதித் துறையில், கடந்தாண்டு, சில பிரச்னை கள் ஏற்பட்டன. அதை சரி செய்யும் முயற்சி யில், தலைமை நீதிபதி ஈடுபட்டுள்ளார். ஆனால், அவருக்கு எதிராகவே, புகார் கூறு கின்றனர்; அவரை மிரட்டும் அளவுக்கு நடந்துள்ளது. பல விஷயங்களை நாங்கள் வெளிப்படையாக பேச முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வழக்கிலும், சில நிர்ப்பந்தங்கள் வருகின்றன.இந்த நிர்ப்பந்தங் களுக்கு, உச்ச நீதிமன்றம் கட்டுப்படாது. சட்டத்துக்குட்பட்டு, நேர்மையாக நடந்து கொள்கிறோம்.இவ்வாறு, அமர்வு கூறியது.

நீதிபதி விலகல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, முன்னாள் பெண் ஊழியர், பாலியல் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக, மூத்த நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையில், அனைத்து நீதிபதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தலைமை நீதிபதி பங்கேற்கவில்லை.

அந்தக் கூட்டத்தில், பாலியல் புகார் குறித்து விசாரிக்க, மூன்று நீதிபதிகள் குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, பெண் நீதிபதி, இந்திரா பானர்ஜி இடம் பெற்றுள்ளனர்.இந்த நிலையில், இந்தக் குழுவில்,நீதிபதி ரமணா இடம் பெறுவதற்கு, புகார் கூறியுள்ள பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

'தலைமை நீதிபதியும், நீதிபதி ரமணாவும் மிக வும் நெருக்கமானவர்கள்.அவருடைய வீட்டுக்கு,ரமணா அடிக்கடிசெல்வார். அதனால், குழுவில், அவர் இடம்பெறக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, இந்த குழுவில் இருந்து, நீதிபதி, ரமணா விலகி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (14+ 66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
26-ஏப்-201917:59:56 IST Report Abuse

K. V. Ramani Rockfortமுக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், மிரட்டும் வகையில், புகார் கூறப்பட்டுள்ளது' வேதனை அளிக்கிறது.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
26-ஏப்-201916:53:17 IST Report Abuse

Balaji யார் அந்த பெண்மணி? ஏன் அவரின் விபரங்கள் வெளியிடவில்லை? வெட்கம்

Rate this:
26-ஏப்-201912:44:37 IST Report Abuse

Gopan Lekshmi Kanthanகொலீஜியம் என்ற பெயரில் மாபியா கும்பல் போல் செயல் படுகிறீர்கள்...சபரிமலை விவகாரத்தில் இந்துகளின் நெடுங்கால நம்பிக்கையை தகர்தீர்கள்....ஓரினச் சேர்க்கை....கள்ள உறவு தீர்ப்பால் இந்திய கலாசாரத்தை சீரழித்தீர்கள்.....இப்போது உங்கள் வீட்டில் தீ பிடிக்கும் போது உங்களுக்கு வலிக்கிறது.....

Rate this:
Krishna Rao - Chennai,இந்தியா
26-ஏப்-201918:44:23 IST Report Abuse

Krishna Raoஅருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் கோபன் லக்ஷ்மி கந்தன். ...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X